அவனே பெறுவதில்லையே, பிறகெப்படி வழங்குவான்

தனது கல்வியறிவைப் பெறுவதிலும், சந்ததியை உருவாக்குவதற்கு, தன்
வாழ்க்கைத் துணை தேடுவதிலும் தன் வாழ்நாளில் கால்பங்கிற்கு மேலே இழக்கிறானே இந்த மானிடன்...

தன் வாழ்க்கைத் துணைக்கும், சந்ததியினருக்கும்
பொருட்செல்வம் தேடும் பொருட்டே, தன் வாழ்நாளில் பாதிபங்கை இழக்கிறானே இந்த மானிடன்....

இத்துடன் அவனது கடமை முடிந்ததா???...
இல்லையே...
அவன் நல்ஞானத்தினை பெறுவதில்லையே...
அவன் தன் சந்ததிகளின் உடல்களுக்கான பொருட்செல்வங்களைச் சேர்த்துவைத்தானே தவிர, எக்காலத்தும் அழியாத நற்பண்புகளுடைய கல்வி அறிவை வழங்குவதில்லையே...

அவனே பெறுவதில்லையே...
பிறகெப்படி வழங்குவான்???....
இவ்வாறே முழுமை நிலையடையாத இந்த மானிடன் வாழ்ந்து மடிகிறானே....

அவன் வாழ்ந்ததையே அவன் சந்ததியினரும் தொடர்கின்றனரே....
இதன் பலனையே நாம் காணுகிறோம் இன்றைய சமுதாய நடைமுறையில்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Dec-16, 8:52 am)
பார்வை : 403

மேலே