மோடியின் ஐம்பது நாட்கள்

எதை நோக்கி செல்கிறது இந்த பாரத தேசம்...?

நவம்பர் எட்டாம் தேதி...
மோடியால் ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் செல்லாது
என அறிவிக்கப் பட்டது.

இதனால் கருப்பு பணம் மீட்கபடும்
கல்லப்பணம் ஒழியும்..
எல்லையில் தீவிரவாதிக்கு கொடுக்கபடும் கல்லபணம் ஒழிக்கபடும் என்ற காரணங்கள்
கூறப்பட்டது..

மோடி கேட்டுக்கொண்ட தேதி கிட்டதட்ட நிறைவு பெறுகிறது..
இன்றோடு(26/12/2016)

அவர் கூறிய காரணங்கள் எல்லாம் முழுமையாக நடைபெற்றதா...?

நாட்டில் உள்ள கருப்பு பணம் எல்லாம் அசையா/அசையும் சொத்துக்களாக உள்ளது.
தங்ககட்டிகளாக உள்ளது.

இவர் இதுவரை பிடித்துல்ல
பணம் எல்லாம் ஊழலின் ஓர் நககண் அளவே...

""அரசியல் கட்சிகளுக்கு மட்டும்
வரிவிலக்கு மற்றும் இருபதாயிரம் ரூபாய் கீழ் அரசியல் கட்சிக்கு பணம் கொடுத்தவர் பெயரை வெளியிட வேண்டாம் என்று ஆணை""...

இது ஒன்று போதாதா?...

இவர்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருந்திருக்கிறார்கள் என்று...?

ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியை மட்டும் பெயரளவில் வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடாத பட்டியலை தயார் செய்து வருமான வரித்துறைக்கு
அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்..,
நாட்டில் 50% அளவு கல்விஅறிவு இல்லை மின்சார பற்றாக்குறை...

இதற்கு நான் காரணமா..?
-மோடி

.சரி..ஆனால் இதை எல்லா சரிபன்னீட்டுதான இந்த (டிஜிட்டல் இந்தியா)திட்டத்த கொண்டு வரனு..

எங்கும் பணத்தட்டுப்பாடு...
சரியான திட்டமிடல் இல்லாமை..

பழைய ரூபாய் தாள்களை தடைசெய்வதர்கு முன் போதுமான அளவு சில்லரை நோட்டுக்களை அச்சடித்துக்க வேண்டும்.

பழைய ரூபாய் நாள்களில் அளவிலே புதிய தாள்களை அச்சிட்டிருந்தால் புதிய தாள்களை
தானியங்கி கருவியில் நிரப்ப எளிதாக இருந்திருக்கும்...

இதற்கிடையே" தனிநபர் ஒருவர் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும்
அதை தாண்டி அதிக அளவு வைய்திருப்பவர்கள் அதர்க்கு உரிய முறையில் கணக்கு காட்ட வேண்டும். பாரம்பரிய நகைகலுக்கு விதிவிலக்கு.."

இது என்ன ஒரு சட்டம்
புரியாத புதிரா..-இல்லை
புதிரில் சிக்கிய ஆந்தைக்கு வழியா...!

அதிகமாக இருக்கும் அணைத்தும் பாரம்பரியமே...!

சரக்கு மற்றும் சேவை வரி...

இவ்வரியை கொண்டு வந்த கனடா ஐரோப்பிய ஒன்றியம் எல்லாம்...மக்கள் தொகை கணக்கெடுப்பு வைத்து பார்க்கும் அங்கே நம்மை விட வேலையில்லா திண்டாட்டம் அதிகம்..

காங. ஆட்சியில் உயிர்காக்கும் மருந்துகள் அணைத்துக்கும் விலைநிர்ணயம் செய்வதில் அரசு ஓர் கட்டுபாடு விதித்து விலையை கட்டுக்குள் வைத்திருந்தது..

ஆனால் இன்று அந்த வரையறை எதுவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயம் செய்யும்...இப்போது உயிர் காக்கும் மருந்துகளின் விலை விண்ணை தொடுகிறது...

சரக்கு மற்றும் சேவை வரி மென்பொருள் உருவாக்கம் செய்தது இன்போஷிஸ்
நிறுவனம் -பட்ஜெட் 1380 கோடி

இதன்..

51%பங்கு கார்ப்பரேட் கையில்..
49%பங்கு அரசாங்கத்திடம்.,

gst ல் பெரும்பாலான பகுதிகளை கார்ப்ரேட் தா இனி கவனிக்கு...(வரி வறைமுறைகள் அடங்கும்)

ஓர் நாட்டின் வருமான வரித்துறை ஐகூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தால் இங்கே எப்படி வாழ்வது...

இப்படி கார்ப்பரேட் கால்களை நக்கித்தான் பிழைக்க வேண்டுமா

இனி வரும் காலங்களில் நம் வாழ்ந்தால் கொத்தடிமைகளாக அதுவும் சொந்த நாட்டிலே வாழ நேரிடும்...

பெட்ரோல் விலை குறைய வில்லை என்பதை கூட ஏற்க முடியும்..

இந்திய நாட்டின் பொருளாதாரம் தங்கத்தின் கையிருபை பொருத்ததே..

தங்கத்தை கொடுத்து டாலரை வாங்குகிறோம்..

டாலரை கொடுத்து பெட்ரோலை வாங்குகிறோம்..

டன் கணக்கில் தங்கம் பதுக்கபடும்போது எவ்வாறு பெட்ரோல் விலை குறையும்...?

டிஜிட்டல் இந்தியா...

எப்பேர்பட்ட சோதனை இது..

ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்பரிவர்தணை செய்தால் 1%
காசு பிடித்து கொள்வார்கள்..

ஆயிரம் ரூபாய்க்கு கீழே மின்பரிவர்தணை செய்தால்
0.75% காசு பிடித்துக் கொள்வார்கள்..

இதுபோக மாதமாதம் சேவைக்கென தனியாக ஒரு குறிப்பிட்ட காசு பிடித்து கொள்வார்கள்..

இவ்வாறு ஒரு வியாபாரிக்கு வங்கி வழியாகவே ஒரு குறிப்பிட்ட சதவிகித பணத்தை வங்கிக்கு செலுத்தும் பட்சத்தில்
அதணை ஈடுசெய்ய அவ்வியாபாரி தன் பொருட்களின் விலையை உயர்த்துவான்..

நாட்டில் உள்ள அணைத்து விற்பனை பொருட்களும் உயரும்..


மொத்தத்தில் மோடி ஓர் மாய பிம்பங்களை உருவாக்கிவிட்டா..

ஆனால் அந்த பிம்பம் இந்த நாட்டை காவு வாங்காமல் இருந்தால் நலம்...

எழுதியவர் : மோகன் சிவா (26-Dec-16, 2:48 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 377

மேலே