அற்புதப் பெண்ணினம்

அரபிக்கடலின் அழகை ரசித்தபடி
அமைதி காத்தவனாய் அமர்ந்திருந்தேன்
அன்றொரு மாலை வேளையில்...


அன்னநடையிட்டு வந்தமர்ந்தாள் பெண்ணொருத்தி
வண்ணப்பட்டுடுத்து வந்தென் சின்ன
மனத்தை வென்றிட்டாள் அப்பேரழகி...


கண்ணைக் கவர்ந் திழுத்திடும்
அவள் பேரழகை வர்ணிக்க
வார்த்தைகள் கோடியாயினும் வசப்படாதே..!


மாந்தளிர் மேனியில் ஆபரணம் பூட்டி
அருவிக் கூந்தலதில் மல்லிப்பூ சூட்டி
கருவிழியோரம் கண்மையும் தீட்டி...


முழுமதி முகமதில் புன்னகைக் காட்டி
முன்வந் தமர்ந்தாள் இளம் சீமாட்டி
முடிவெடுத்திட்டேன் அவள்தான் என் மணவாட்டி..!


கடற்கரை மணலில் அவள் பாதம்
அதுவோ புனிதத் திருக்கோலம்
மணம் வீசிடுமே அம்மண் நெடுகாலம்..!


தொட்டால் சிவிங்கிபோல் வெட்கம்
கொள்கிறேன் அவள் பாதக்
கொலுசின் ஓசை கேட்கையில்..!


அவள் பார்வையோ பித்துப் பிடிக்கவைக்கும்
அவள் சிரிப்போ சிந்தையை சிதறடிக்கும்
அவள் உதடோ உளறித் திரியவைக்கும்...


அவள் குரலுக்குக் குயிலும் தோற்றிடுமே
அவள் கூந்தலும் தோகை யாகிடுமே
அற்புதப் படைப்புதான் பெண்ணினமோ..?


வெண்ணிலவு தன்முகம் காட்டிடுமென
வெட்கம்கொண்ட கதிரவனோ மேற்கில்
சென்று தன்னை மறைத்துக்கொண்டான்...


வெண்மதியோ அன்று அவள்முகம்
கண்டு பொறாமையில் இன்று
அமாவாசை என்றுச்சொல்லி மறைந்திற்றே..!

-ரசீன் இக்பால்

எழுதியவர் : ரசீன் இக்பால் (26-Dec-16, 3:51 pm)
பார்வை : 578

மேலே