சிந்திக்க வைத்துவிட்டான்

மாணிக்கம் தம்பதிகளுக்கு பாலன் ஒரே மகன். விரைவாக வளர்ந்துவிட்டான். அவன் சிந்தித்து செயல்படுபவன். வயது பத்து. அவன் கேட்கும் கேள்விகளுக்கு மாணி;க்தத்தால் ; சில நேரங்களில பதில் சொல்லமுடியாது. பாலனுக்கு அதிக புத்தி கூர்மை.

பாலன் தன் பாட்டி மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தான். தினமும் பாட்டி அவனுக்கு; கதை சொல்லுவாள் அவனைத் தூங்க வைக்க. அது மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது, இப்போ பாட்டியால் பேரனுக்குக் கதை சொல்ல முடியாத நிலை. பாவம் அவள். அல்செய்மார் என்ற ஞாபக மறதி வியாதி அவளைப் பாதித்துவிட்டது. பாட்டி தேவையில்லாமல் பேசுவாள், அவள் பேச்சில் விளக்கம் இல்லை. சில சமயஙகளில் சாப்பிட மறுத்துவிடுவாள். எவ்வளவுக்குத் தான் அவள் செயல்களை மாணிக்கம் பொறுத்துக்கொண்டு இருப்பது.
மாணிக்கம் தன் தாயை முதியோரைப் பராமரிக்கும் விடுதி ஒன்றில்; சேர்த்து விட தீர்மானித்தார். தன் மனைவிக்குத் தன் திட்டத்தைச் சொன்னார். அவளுக்கும் அது சரியெனப் பட்டது. தந்தையும் தாயும் பேசியதை பாலன் கேட்டுக் கொணடிருந்தான்; .

♠♠♠♠

அன்று பாலன்; படம் வரவதை அவனின் தந்தை மாணிக்கம் கண்டார். அதிசயமான படம் அது. ஒரு பெரிய வீடும் ஒரு சிறிய வீடும் படத்தில் பாலன் வரைந்திருந்தான். எதற்காக பாலன் அபடி பெரிதும் சிறிதுமாக இரு வீடுகளை வரைந்தான என்பது அவருக்குப் புரியவில்லை.
“ ஏன் பாலா இரண்டு வீடுகள் வரைந்திருக்கிறாய்”?
“அப்பா பெரிய வீடு நான் பொரிதாக வளர்ந்ததும் நான் வாழ.”
“ அப்போ அந்தச் சின்ன வீடு”
“அது நீங்களும் அம்மாவும் வயது வந்த காலத்தில் வாழ”
“அதேன் அப்படி”?
“ இப்போ பாட்டியை வேறு வீட்டுக்கு அனுப்பப் போகிறாயே அப்பா”
பாலனின் தந்தை தன் மகனின் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
தன் தாயை முதியோர் விடுதிக்கு அனுப்ப இருந்த திட்டத்தை தான் கை விட்டதாக மனைவிக்குச் சொன்னார்.
♣♣♣♣♣♣

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (26-Dec-16, 7:32 pm)
பார்வை : 389

மேலே