ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை

ஒரு ஆசிரியர் தேர்வு விடுமுறை சமயத்தில் ஒரு வாரமோ, பத்துநாளோ மாணவர்களின் படிப்பில் இடைவெளி விழுந்து விடும் என்பதற்காக, அவர்களுக்கு வீட்டுப்பாடங்களைக் கொடுத்து அனுப்புவார். விடுமுறை நாட்களில் கல்வியை மறத்தல் கூடாது என்பதற்காக அவர் இடும் கட்டைளைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுமாயின், அவரின் பாராட்டுப் பார்வை மாணவர்கள் மேல் விழும். இல்லையென்றால் தடியோடு அடி விழும்.

பத்துநாள் பிரிவிற்கே பாடங்களைக் கொடுத்து அனுப்புகிறார் ஆசிரியர். இறையோடு பந்தம் அறுக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூமிக்கு வரும் நமக்கு எத்தனை கட்டளைகள் ஆண்டவன் இட்டிருப்பார் , யோசித்தீர்களா?

குருவிடம் இருந்து விடைப்பெற்ற சீடன் குருவின் தூதுவனாக செல்லும் இடமெல்லாம் குருவின் ஞானத்தைப் பரப்புவான். கர்ணனின் அம்பை வைத்தே அவன் பரசுராமரின் சீடன் என்று கண்டறிந்தார் பீஷ்மர். இதைப்போலவே இறையிடம் இருந்து விடைபெற்று வந்த நாம் இறையின் தத்துவத்தை பரப்பி இறையோடு கலக்க வேண்டும். செய்கிறோமா?

இறையைத் தேடாமல், வெறும் இரையைத்தேடி பின்பு பொருளைத் தேடி ,சுகத்தைத் தேடி,ஓயாமல் ஓடி, முடிவில் மரண பயத்தினால் கோயிலுக்கும், வழிபாடு தலங்களுக்கும் சென்று கடவுளைத் தேடி, இறுதியில் ஏமாற்றத்துடன் பூலோகம் விட்டுப் புறப்படுகிறோம். ஆண்டவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றாமல் அவரின் கருணைப் பார்வைக்கு ஏங்குவது வீட்டுப்பாடம் எழுதாமல் ஆசிரியரின் தண்டனைக்கு பயந்து நடுங்கும் மாணவர்களின் நிலைமைதான் இங்கும்.

ஆண்டவனின் ஆரோக்கியப் பார்வை நம் மீது விழவேண்டுமாயின், அவரைத் தேடுவோம், அவரிட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். வாருங்கள். பிறப்பின் பொருள் புரியும்.

விஜய் கணேசன்

இறைவன்

எழுதியவர் : விஜய் கணேசன் (27-Dec-16, 10:15 am)
சேர்த்தது : விஜய் கணேசன்
Tanglish : aandavan kattalai
பார்வை : 274

சிறந்த கட்டுரைகள்

மேலே