அவள் அழகைப் பார்

நானும் என் நண்பன் முரளியும் ஒபீசுக்குப்;போவதற்காக பஸ் ஸ்டான்டில் பஸ்வரும் வரை காத்துக்கொணடு நின்றோம். தான் செய்யும்; வேலையைப்பற்றி பேசிகொணடிருந்த முரளி தன் பேச்சைத் தீடிரென நிறுத்தினான்.

“ஏண்டா முரளி நீ பேசுவதை நிறுத்திவிட்டாய். எதூவது பிரச்சனையா”? நான் அவனைக் கேட்டேன்.

அவன் நாங்கள் நின்ற பஸ் ஸ்டாண்டுக்கு அருகே சிவப்பு நிற ஜீன்சில், கையில் ஒரு பையோடு தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணை எனக்குச் சுட்டிக்காட்டி, “ அதோ அந்தப் பெண்ணின் முன் அழகைப் பார்த்தாயா? பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என்ற நான்கு வகை பெண்களில் அவள் பத்மினி வகை பெண் போல எனக்குத் தெரிகிறது. என்ன நீ நினைக்கிறாய் ரவி அவள் அழகைப்பற்றி”? முரளி என்னைக் கேட்டான்.

முரளி பெண்களை அணு அணுவாக இரசிக்கும் குணம் உள்ளவன். பெண்களின்; உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறும் சாமுத்ரிகா லட்சணத்தைப் பற்றி பல நூல்கள் வாசித்து ஆராயச்சியே செய்தவன். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் பழக்கம் முரளிக்குண்டு இந்த சாத்திரம். பற்றி மேலும்; அறிய அலன் காட்டிய அப்பெண்ணை உற்று நோக்கிவிட்டு அவன் வாயைக கிண்டினேன்.

“ என்னடா முரளி நீ தான் பெண்களின் சாமுத்தரிகா இலட்சணங்களைப் பற்றி நன்கு அறிந்தவனாயிற்றே. அந்தப் பெண்ணின் தோற்றம் அந்த நான்னு வகை பெண்களில் எந்த வகைப்பெணணைச் சேர்ந்தது என்று நினைக்கிறாய்?, நான் முரளியைக் கேட்டேன.

அவன புன்னகையொடு “அவள் பத்மினி சாதிப் பெண் எண்டு நான் நினைக்கிறேன்;. கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருக்கக்டீயவள். தன் கண் பார்வையால் என்னை கவரநதுவிட்டாள். அவளிண்டை, கொடியிடையும், மெல்லியா தேகமும் பத்மினி சாதி என்று எடுத்துக்காட்டுகிறது.;. இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இதெல்லாம் அவளுக்கு பொருந்துகிறது” முரளி விளக்கம் கொடுத்தான்

“அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவள் எனபதால்’ மான்சாதி பெண் என்கிறாயா”? நான் மேலும்அவனின் கருத்தைக் கேட்டேன்.

“சரியாகச் சொன்னாய் ரவி. அவள் நடந்தால் மானின் நடை போல் இருக்கும் என நினைக்கிறேன்.”.

எனக்கு புரிநதுவிட்டது முரளி அந்தப் பெண்ணைப் பார்த்ததும் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவளின் அழகை இரசித்துகொண்டிருந்தான் என்று. முரளிக்கு எந்தப ;பெண்ணைக் கண்டாலும் கண்வெட்டாமல் பாரத்து அழகை இரசிக்கும் பழக்கம் உண்டு.

நான் பதில் சொல்லாது நி;ன்றேன்.

“ரவி என்ன பேசாமல் இருக்கிறாய். எப்படி இருக்கிறது அவளது அழகு? அதைப் பற்றி என்ன நினைக்கிறாய”? அவளது உயரத்தைப் பார்த்தாயா?. சுமார் ஆறடி இருக்கும் என நினைக்கிறேன். அனிந்திருக்க கருப்புக் கண்ணாடி அவளுக்கு அழகாக இருக்கிறது. மெல்லிய உடம்பு. துடியிடை, முகத்தைப்; பார். பார்பதுக்கு ஒரு மொடல் போல் தெரிகிறது:

“ இங்கை பார் முரளி வெளிததோற்றத்தை வைத்து நான எப்படி பதமினியா போன்ற அழகியா என்;று இல்லையா என்று சோல்ல முடியும்?;.

முரளி இன்னும் திருணமாகாதவன். அவன் காணும் பெண்கள் எல்லாம் அவனுக்கு அழகிகள் என்று எனக்குத்தெரியும்.

“நீ ரவி திருமணமானவன். உன் மனைவியின் அழகை மட்டும் இரசிபவன். மற்ற பெண்களின் அழகை ரசிக்கத் தெரியாதவன். உன்னிடம் போய அந்தப் பெண்ணின் அழகைப்பற்றி கேட்டேனெ. நான் ஒரு மடையன்” என்றான் முரளி.

எங்கள் சம்பாஷணையை பஸ்டாண்டில் எங்களோடு நின்ற ஒருவர் கேட்டுக்;கொண்டு இருநதார். அவர் முரளியைப் பார்த்து
“சேர் இவ்வளவு சீக்கிரம் உங்கள் முடிவை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். அப்பெண்ணின் வெளிப்புறத் தோற்றம் இருந்து நீங்கள் எடுக்கும் முடிவு பொருத்தாமனதாக இல்லை என நினைக்கிறேன்”

" அப்படி சொல்ல வேண்டாம் அதோ போவோர் ஒவ்வொருவரும் அவளின அழகை பார்த்து இரசித்தபடியே போகிறார்கள்.” டிக்றான முரளி

"முரளி, முதலில் அவளது முன் புறத் தெர்றததை உறறு நோக்கு;. எனககு என்னவோ அவள் முக அழகில ஏதொ இரகசியம் மறைநது இருக்கிறது போலத் தெரிகிறது", நான் சநதேகதடதோடு பதில சொன்னேன்.

" உனக்கு எப்போதும் சந்தேகம் தான். நாஙகள் போய அவளோடுப் பேசி பாரப்போமா. அப்போதாவது உன் சநதேகததை போகக்கலாம்.

”அது நல்ல யோசனை” என்றேள் நான்

“அவள் நிற்கும் இடததை நோக்கி வேகமாக நட. அவளை நாஙகள் பார்த்து நாங்கள் அவளை கவனிக்கிறோம் என்ற உணர்வை கொடுக்க கூடாது, "முரளி ரவியை எச்சரித்தான்.

அவள் அருnகு சென்று கடைக்கண்ண்hல் அவதானிதது பஸ்ஸடாண்டுக்கு ;.

“ ரவி இப்போ என்ன சொல்லுகறாய் அவளுடைய அழகைப்ட பற்றி”?
முரளி என் கருத்தை கேட்டான்.
;
"அவள் முகத்தில் மேகஅப் அதிகம் பேர்ட்டு, உதட்டில லிப்பிட்டடிக பூசி எதையோ மறைக்கப் பார்க்கிறாள் என நினைக்கிறேன்.. நான் அவளை ஒரு அழகு ராணி என்று சொல்ல முடியாது, நூற்றுக்கு அவளுக்கு நாறபது மார்க்ஸ தான நான்; கொடுப்பேன்” அவளது அழகை மதிப்பீடு செய்து என் மனதில் பட்டதைச் சொன்னேன்.
.
" ரவி நீ மதிப்பீட செயவதில சரியான் சிக்கனக் காரணடா”இ முரளி வெறுப்போடு பதில் சொன்னான்.

பஸ் ஸ்டாண்ட்டில் எங்களுக்கு அருகெ நின்ற ஒருவர் எங்கள் உரையாடல் கேட்டு கொண்டிருநதாரட். அவருககு; நாங்கள் பெண் அழகு பற்றி விமரசிக்கிறோம் என்று விளங்கிவிட்டது

அவர் தாழ்ந்த குரலில் "சேர் அவள் அழகைப் பார்த்து ஏமாற வேண்டாம்" என்றார்.

"ஐயா நீங்கள் ஏன் அப்படி சொல்கிறீரகள்?" முரளி அவரைப் பார்த்து கேட்டான்

"நீங்கள் மிக விரைவில் நான் ஏன் அப்படி சொல்லுகீpறன் எனறு காணப் போறியள்;.;" என்று அவர் சொல்லி வாய் மூட முன்,

ஒரு ஸ்போரட்ஸ கார் அவளுக்கு சற்று தள்ளி போய் நின்றது. அக் காரின் முன் சீட்டில் இருந்த இளைஞன் காரில் இருந்து இறங்கி, அவளை நோக்கி நடந்தான். நாங்கள் இவ் இளைஞனை காணதவாறு இருநதோம். அவ்விளைஞன் சில நிமிடங்கள் அப்பெணnணூடு பேசினான்.
ஒருவேலை அப்பெண்ணின காதலானாக இருக்குnமுh என நான நினைத்தென்.
நாஙகள பாரத்துக் கொணடு இருக்கும் போது அவ் இளைஞன் ஒரு கட்டு கரன்றி நோட்டடை அப்பெண்ணிடம் கொடுப்தைக் கண்டும் காணதது போல நி;ன்றொம். அவள தன கைப் பையில் இருநது ஒரு சிறிய பார்சலை அவனிடம் எடுத்துக் கொடுத்தாள். அடுத்த நிமிடம அவன் காரில் ஏறி போய்விட்டான்

முரளியால் நடந்ததை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கோ நடநதத என்ன வெள்று தெரிந்து விட்டது.

"ஐயா அவள் என்ன பார்சலை அந்த இளைஞனிடம் கொடுத்வள”? பஸ்சுக்காக் காத்திருக்கும் நபரைப் பார்த்து முரளி கேட்டான.;.

" இது தெரியாதா உமக்கு அவள் போதை மருந்து விற்பவள்;. என்று"? பதில சொன்னார் அவர்.

"ஒரு அழகான பெண போதை மருந்து தொழில் செய்கிறாள் என்பதை. என்னால் நம்ப முடியவில்லை ஐயா" முரளி அவரைப்பாரத்து சொன்னான்.

“ ஆழகு இருக்கிற இடத்தில் தான் ஆபத்தும் இருக்கிறது தம்பி. அவள் எண்ணங்கள் மற்றும் நடவடிக்கை அழகாக இல்லை. மூன்று மாதங்களுக்கு முன் ஒரு மருந்து வியாபாரத்தில தனனை ஏமாற்றியதற்காக ஒரு தாதா அவள் முகத்தில் அசிட் வீசினான் "

" என்ன? அவள் முகத்தில அசிட் வீசப்பட்டதா? முரளி அவரைக் கேட்டான்

"ட்ரூ. அவள் முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தாள்;. இப்போது அவள் பாரப்பவர்களுக்கு அழகியாக தேற்றம் அளிக்கிறாள். அவள் கெட்ட மனம் உள்ளவள். வெளி அழகல்ல, மன அழகுதான் முக்கியம் "என்று அவர் பதிலளித்தார்.

எனக்கு அவர் சொன்னது சரி எனப்பட்டது

நான் முரளி பார்த்தேன். நான் அவருடைய முகத்தில் ஏமாற்றத்தை பார்க்க முடிந்தது. அவள் எங்களை நோக்கி வந்தாள். அதிர்ஷ்டவசமாக அந்நேரம் நாங்கள் போகும் பஸ்சும் வந்தது. நானும் முரளியும் அவளொடு பேசாது பஸ்ஸில் ஏறினோம் .

பஸ்சுக்குள் முரளி பேசாமல் இருந்ததைப் பார்த்த நான், “முரளி உன் அழகு ராணியிடம் இருந்து எங்களைக் கடவுள் காப்பாற்றிவிட்டார்” என்றேன்.

முரளி ஒன்றுமே பேசாது அமைதியாக இருந்தான். .

♠♠♠♠♠♠

எழுதியவர் : பொன் குலேந்திரன் கனடா (27-Dec-16, 10:21 pm)
பார்வை : 645

மேலே