துளிப்பில் முத்துக்கள் ---முஹம்மத் ஸர்பான்

இருளை பிளந்து
யுகம் ஆள்கிறது
பாசத்தின் கடிவாளம்

தாயின் நிழலில்
மழலை ஆட்சி
காமுகன் வேட்டை

உதைபடும் பூமி
போராடும் ஏழை
வாழ்வாதாரம்

காற்றில் மிதந்து
மரணம் வெல்கிறது
வில் வித்தைகள்

கல்லடி பட்டும்
உடையாத கண்ணாடி
வறுமை

வீசும் காற்றில்
வரலாற்றை மாற்றியது
உதிர அருவிகள்

இயற்கை அழகை
ஆசை தீர கற்பழித்தது
வாடைக் காற்று

ஆனந்த நீச்சல் போடும்
பச்சை வெள்ளத்தில்
மழலை ஓடங்கள்

ஒரு கையில் இலை
மறு கையில் தூண்டில்
நடுவில் ஒரு நட்பு

இணைந்த தோள்கள்
கூட்டணியின் வெற்றி
தூண்டில் மீன்கள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-Dec-16, 2:48 pm)
பார்வை : 199

மேலே