சிற்பம் எங்கே

உங்க வீட்டு சிற்பம் எங்கடா தம்பி?
@@@@
எங்க வீட்டுல சிற்பம் எதுவும் இல்லீங்க அண்ணா. கோயில்ல பணக்காரங்க வீட்டில சிற்பமெல்லாம் வச்சிருப்பாங்க.
@@@@
இல்லடா தம்பி நீ பெத்த சிற்பம்.
@@@!
என்ன அண்ணே என்னக் கிண்டல் பண்ணறீங்க? மனுசங்க சிற்பத்தைப் பெற்றெடுக்க முடியுமா?
@@@@@
இல்லடா உம் மனைவி முத்தம்மா பெற்றெடுத்த ஒரே மகள் சிற்பத்தைத் தாண்டா காணம்னு கேக்கறேன். நம்ம அம்மாகூட அவள 'சிலுப்பா சிலுப்பா' -ன்னு கூப்புடுவாங்களே!
@@@@
ஓ.... 'ஷில்பா' -வைக் கேக்கறீங்களா?
ஆமாண்டா மடத் தம்பி மருது. நீயெல்லாம் ஒரு தமிழாசிரியர். தமிழப் பேர வைக்கத் துப்பு இல்லாம பெத்த பிள்ளைக்குத் தமிழ்ப் பேர வைக்காம அர்த்தம் தெரியாத, அம்மாவால தன்னோட சொந்தப் பேத்தி பேரக்கூட சரியா உச்சரிக்க முடியாத இந்திப் பேரா வச்சு நம்ம செம்மொழியை இழிவு படுத்திட்டயே.
@@@@@
என்ன மன்னிச்சுக்கங்க அண்ணா. நாந் தமிழ் ஆசிரியரா இருந்தும் ஒரு சினிமா ரசிகன் மாதிரி எம் பொண்ணுக்கு இந்திப் பேர வச்சுட்டேன். நான் நாளைக்கே ஒரு வழக்குரைஞரப் (Notary Public) பாத்துப் பேசி பாப்பா பேர 'சிற்பம்' -ன்னு மாத்திடறேன்.
@@@||@||||||||||||||||$$$$$$$#########|@@@@@##|~~~~~~~
சிரிக்க அல்ல;சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (29-Dec-16, 10:53 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 395

மேலே