காதலை தேடி-36 சுபம்

காதலை(லே) தேடி-36
உன் மூச்சும் என் மூச்சும்
ஒன்றோடு ஒன்றாக
இணைந்துவிட்ட பிறகு
எங்கிருந்து வர போகிறது
பிரிவொன்று நமக்கு....

மாங்கல்யம் மட்டுமல்ல
நம் உறவுக்கான சாட்சி
உன் மீது நான்
கொண்ட காதல் ஸ்பரிசமும் தான்
என் காதல் சகியே.........

உன் நினைவுகளாலே
உயிர் வளர்த்து காதல்
யாகம் செய்து
கண்டேன் உன்னை நான் என்
வாழ்வின் மோட்சமென.....

இனி ஓர் பிரிவினை
காலம் தருமென நினைக்கும் முன்
திகட்ட திகட்ட உன் கரம்
கோர்த்து காதல் செய்வேன்
என் ஜென்மம் நிறைவடைய
என் இனியவளே இனியே....
"அம்மா, அம்மா எங்க இருக்கீங்க......."

"சாரு எதுக்குப்பா இப்படி அவசரமா கூப்பிட்டு இருக்க, என்ன விஷயம், எதாவது வேணுமா?"

"அம்மா, நான் சொல்லிருக்கேன்ல சாரதி சார் பத்தி, அந்த சாரதி சார் இவர் தான்"

"ஓஹ், ரொம்ப நல்லது, வணக்கம் சார், உங்களை பத்தி சாரு நிறைய சொல்லிருக்கான் சார், உங்களை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்"

"இவங்க தான் உங்க அம்மாவா தம்பி, அம்மா உங்களை பத்தியும் சாரதி நிறைய சொல்லிருக்கான், இப்போ நான் இங்க வந்ததே உங்களை பாக்கணும்னு தான், எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி..."

"சார், என்னோட அம்மா இவங்க இல்ல, இவங்களும் எனக்கு அம்மா போல தான், சொல்ல போனா இங்க இருக்க எல்லாருமே எங்களுக்கு அம்மா தான்"

" ஆமா சார், சாரு சொல்றது உண்மை தான், இங்க இருக்க எல்லாருமே எனக்கு பிள்ளைங்க தான், எல்லாரையும் விட சாரு எங்க எல்லாருக்கும் செல்ல பிள்ளை, அதுவும் சாரதி அம்மாவுக்கு செல்லமோ செல்லம் தான்"

"போதும் தேவகிம்மா, அம்மா எங்கன்னு சொல்லுங்க, அம்மாக்கு நான் ரொம்ப பெரிய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்"

"எதுக்கு சாரு இப்படி பறக்கற, சாரதிம்மா இப்போ தான் வெளிய போனா, வர பண்டிகைக்கு பிள்ளைகளுக்கெல்லாம் பரிசு பொருள் வாங்கணும்னு போயிருக்கா , இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா, அதுக்குள்ள நீ சார்க்கு சாப்பிட எதாவது குடுப்பா, நான் நம்ப வாலுங்க எல்லாம் என்ன பண்ணறாங்கனு பாத்துட்டு வந்துடறேன்"

"சரிங்க அம்மா, நான் பாத்துக்கறேன், நீங்க சீக்கிரம் போங்க, நீங்க இல்லாத நேரத்துல எண்ணலாம் சேட்டை பண்ணி வச்சிருக்க போறாங்களோ"

" வாங்க சார், அம்மா ரூம்க்கு போகலாம்"
"சார், இது தான் எங்க அம்மா ரூம், வாங்க சார் உள்ள போய் பாக்கலாம்"

"வேண்டாம்பா, உங்க அம்மா வந்துரட்டும், அவங்க இல்லாத நேரம் அவங்க ரூம்க்கு போறது அநாகரீகம்"

"சார், இந்த ரூமுக்குள்ள போக நீங்க யோசிக்கிறது தான் அநாகரீகம், இந்த ரூம்குள்ள போறதுக்கு முழு உரிமை உங்களுக்கு மட்டும் தான் சார் இருக்கு, வாங்க சார்"

என்ன சொல்றான் இவன், என் பெயர் உள்ள இவன் இத்தனை நாள் தன்னை சாரு என சொல்லிக்கொண்டது எதற்கு, இன்னைக்கு அவன் அம்மாவின் அறைக்குள் போக எனக்கு உரிமை உள்ளதென பிதற்றுவது எதற்கு, கடவுளே உன் விளையாட்டு எதுவுமே எனக்கு புரிபடா புதிராக இருக்கிறதே..........

"சார், என்ன யோசனை உள்ள வாங்க, உள்ள வந்து பாருங்க எல்லாமே புரியும்"

"உங்க அம்மா ரொம்ப ரசனை உள்ளவங்க போல, சுவர் முழுக்க குழந்தைங்க படமா வரைஞ்சி வச்சிருக்காங்க, எல்லா படமும் உயிருள்ளது போல அத்தனை அழகும் அம்சமா இருக்குப்பா"

"சார், இதெல்லாமே உயிருள்ள குழந்தைங்க படமாச்சே, அப்டி தான் இருக்கும்.......என்ன சார் பாக்கறீங்க, இதோ இந்த படத்துல இருக்க குழந்தை நான் தான், என்ன முதன்முதலா அம்மா பாத்து அடைக்கலம் குடுத்தப்ப நான் இப்படி தான் இருந்தேனாம், அப்புறம் இந்த படம் நாம வெளில பாத்த அந்த குட்டி வாலு பொண்ணோடாது, இப்படி எல்லா படமும் உயிருள்ளது மட்டுமல்ல அம்மாவோட அன்பாலே உருவானது"

"நிஜத்துல சொல்லனும்னா உங்க அம்மா ரொம்ப கிரேட் பா, இப்படி ஒரு அம்மா கிடைக்க நீங்க எல்லாம் அதிர்ஷ்டம் தான் பண்ணிருக்கணும்"

"இல்ல சார் அப்டி தான் இத்தனை நாளும் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எல்லாத்தையும் காட்டிலும் எங்க அம்மா தான் அதிர்ஷ்டம் பண்ணிருக்காங்க, ஏனா காதலை மட்டுமே உடலும் உள்ளமுமா கொண்ட கணவர் அவங்களுக்கு கிடைச்சிருக்காங்களே"

"உங்க அப்பா உயிரோட தான் இருக்காங்களா, ஸாரிப்பா இதுவரை உன் அப்பா பத்தி நீ எதுவும் சொன்னதில்லையா, அதான் அவரு இல்லயோன்னு தப்பா நினைச்சிட்டேன், ரியலி சாரிப்பா"

"பரவால்ல சார், இத்தனை நாளும் நான் கூட அப்படி தான் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எங்க அம்மாவோட கணவர் எந்த அளவு நல்லவரு, அம்மாவை உயிரா நேசிக்கறவருனு எனக்கு கொஞ்ச நாளா தான் புரிஞ்சது"

"என்னவொப்ப, நீ சொல்ற பலது எனக்கு புரியல, சரிப்பா உன் அம்மா எப்போ வருவாங்க, நான் ஏர்போர்ட் வேற போகணும்"

"இப்போ வந்துடுவாங்க சார், இன்னுமும் உங்களுக்கு சாப்பிட எதுவும் தரல, ஞாபகம் இருக்கு இருந்தாலும் அம்மா கையாள கொடுத்து நீங்க சாப்பிடறது தான் எல்லாருக்கும் சந்தோசம் தரும், அதான் சார், தப்பா நினைச்சிக்காதிங்க"
என்ன தான் சொல்ல வரான்…. அந்த அம்மாவை பாத்துட்டு முதல கிளம்பனும், இன்னைக்கு என்னவோ மனசெல்லாம் படபடன்னு இருக்கு, என்னவோ மாதிரியா பீல் ஆகுது, முதல் முதல இந்த சாருவை நான் பாத்தப்போ இருந்த அந்த உணர்வு இப்போ அவன் அம்மாவை பாக்க வெயிட் பண்ணும்போது ஏற்படுது, இதெல்லாம் எதனாலயோ, புரியாம மனசெல்லாம் என்னவோ பண்ணுது.....

"சார், அம்மா வந்துட்டாங்க, கார் சத்தம் கேட்குது, நீங்க இங்கயே இருங்க நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன்"
"அம்மா, கண்ணை திறக்காதிங்க, உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சினு சொன்னேன்ல, பேசாம வாங்க, இந்த சாரு சொன்ன கரெக்ட்டா இருக்கும்,....
"என்ன சாரதி விளையாட்டு, இன்னமும் சின்ன குழந்தை மாதிரி"

யார் குரல் இது, இந்த குரல்........இந்த குரல் என்னோட.......என்னோட சகி குரல் மாதிரி......யார் குரல் இது, என் கற்பனையா இது......என்னோட உடல் எல்லாம் நடுங்குதே, எதற்கு இப்படி வேர்த்து கொட்டுது......சகி நீ தான் எனக்கு துணையா இருக்கனும்....

"என்னமா நீங்க, அந்த வாண்டுங்க கூட சாருன்னு கூப்பிடுதுங்க, நீங்க மட்டும் தான் அழுத்தம் திருத்தமா சாரதி னு கூப்பிடறீங்க, உங்களுக்கும் சாரதி பேருக்கும் அப்படி என்ன பந்தமோ'

" அம்மா நீங்க என்ன சொல்ல வருவீங்கன்னு எனக்கு தெரியும், இது காலத்தால் இல்ல, ஜென்ம ஜென்மமா இருக்க பந்தம்னு, சரி தான"
"போதும்டா உன் விளையாட்டு, எனக்கு நிறைய வேல இருக்கு, வாங்கின பொருள் எல்லாம் இன்னும் எடுத்து கூட வைக்கல, என்ன விடு சாரதி"

"உங்களை விடணும் அவ்ளோ தான, இதோ விட்டுட்டேன், இப்போ முன்னாடி நிக்கறவரை பாத்துட்டு முடிஞ்சா உங்க வேலைய கவனிக்க போங்க"

"யாரை சொல்ற"

"நீங்களே பாருங்க, நான் அதுக்குள்ள சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்"
"யாரு, யாருங்க நிக்கறது?"

"சார், உங்களை தான் கேட்கிறேன், நான் பேசறது கேட்குதா இல்லையா, கொஞ்சம் திரும்பி என்ன பாருங்க சார்"

இது இது என் சகியின் குரலே தான், என்னால அவள் முகத்தை பார்க்க முடியுமா, ஒருவேளை அது என் சகியாய் இல்லாமல் போனா என்னால எப்படி தாங்க முடியும், கடவுளே அது என் சகியாய் இருக்கணும்....

"சார், உங்களை தான் கேட்கறேன், என்ன பாத்து பதில் சொல்லுங்க, அபிஷியல் விஷயமா பேசறதுனா ஆஃபீஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க சார், இல்ல பெர்சனலா யாரையாவது பாக்கணும்னா கெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ணனும், இது என்னோட பர்சனல் ரூம், இங்க யாரையும் நான் அனுமதிக்கிறது இல்ல..."

"சார், நான் பேசறத கவனிக்கறிங்களா இல்லையா, இது எனக்கு மட்டுமே உரிமையான தனிப்பட்ட அறை, இங்கு யார் வரவும் உரிமை இல்லை"

" எனக்கு கூட வர உரிமை இல்லையா சகி"

"இது, இது யார் குரல், இப்போ யார் பேசினது...இப்போ நான் கேட்டது நிஜமா, என்ன சகினு யார் கூப்பிட்டது, நான் எல்லாருக்குமே சாராதிம்மா தான"

"ஆனா எனக்கு எப்பவுமே நீ சகி தான, என்னை தவிர உன்னை யார் இப்படி உரிமையா கூப்பிட முடியும் சகி "

"நீங்க................நீங்க......"

"சகி, சகி என்ன ஆச்சு, நான் தான் சகி உன் சாரதி..... யாராவது இருக்கீங்களா, சகி ……என் சகி மயங்கி விழுந்துட்டா, யாராவது வாங்களேன்"

"அம்மா, அம்மாக்கு என்ன ஆச்சு"

"சகி மயங்கி விழுந்துட்டா, தண்ணி கொண்டு வா"

"சார், நீங்க டென்சன் ஆகாதீங்க, அம்மாக்கு ஒன்னும் இல்ல, அம்மா ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட இப்படி மயங்கி விழுந்துடுவாங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க பயப்படாதீங்க"

"முதல தண்ணிய தெளிப்பா"

"அம்மா எழுதிந்திருங்கம்மா, உங்க சாரதிப்பா வந்திருக்காங்கம்மா, நீங்க இப்படி மயங்கி விழுவீங்கன்னு தெரிஞ்சி தான் கையோட தண்ணி எடுக்க போனேன், உங்களுக்கு ஒன்னும் இல்லம்மா, அப்பா திரும்ப வந்தாச்சு, பாருங்க உங்க முன்னாடி யாரு நிக்கறதுனு"

"நீங்க, நீங்க..............நீங்க எப்படி இங்க, இவ்ளோ நாள்....என்ன விட்டு......வந்துட்டீங்களா....... திரும்ப என்ன விட்டு போயிடமாட்டீங்களே"

"சகி, மெதுவா எழுந்திரு, ரொம்ப எமோஷனல் ஆகாதம்மா, நான் தான் சாரதி, உன் சாரதி வந்துருக்கேன், திரும்ப என் சகிய தேடி வந்திருக்கேன், இனி உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன், இது சத்தியம் சகி"

"என்னங்க......."

"அழாத சகி, நீ அழுதத வரை போதும் இப்போ எனக்கு எல்லாமே புரிஞ்சி போச்சு, உன்ன விட்டு நான் பிரிஞ்சி போய் எத்தனையோ லட்சம் சம்பாதிச்சேன், என்னால அது தான் முடிஞ்சது, ஆனா நீ சாரதி அம்மான்னு பேரையும், எனக்கு அப்பான்ற அந்தஸ்த்தையும் சம்பாரிச்சு வச்சிருக்கியே இது ...இது போதும் சகி, என் சகி எனக்காகவே வாழ்ந்திருக் கான்ற நினைப்பு போதும், இப்போவே நான் செத்தாலும் நிம்மதியா போவேன்"

"என்ன பேச்சு இது, இனி உங்களை நான் எங்கேயும் போக விடமாட்டேன், சாரு உங்களை பத்தி எவ்வளவோ சொல்லிருக்கான், ஆனா நீங்க தான் என்னோட சாரதினு மட்டும் சொல்லாம விட்டுட்டான்"

"சொல்லிருந்தா இந்நேரம் இப்படி நீங்க கட்டி பிடிச்சி ரொமான்ஸ் பண்ண முடியுமா, சாரதிம்மா, போதும்..நாங்கல்லாம் இங்க தான் இருக்கோம், சாரை ரொமான்ஸ் பண்ணது ஸ்டாப் பண்ணிட்டு சாருக்கு சாப்பிட எதாவது குடுங்க, இதுக்காகவே சாரை காலைல இருந்து பட்னியா வச்சிருக்கேன்"

"போடா வாலு, உனக்கு எப்பவும் விளையாட்டு தான், வாங்க சாப்பிடலாம்"

********
"வயிறு மட்டும் இல்ல, மனசும் நிறைஞ்சிருக்கு சகி, இத்தனை நாள் உன்ன நான் பிரிஞ்சி இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா, எல்லாமே நான் செஞ்ச தப்பு தான்"

"போதும் விடுங்க எத்தனை தடவ இதையே சொல்லி வருத்தப்பட்டுட்டு இருப்பிங்க, எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்கோங்க"

"இந்த நாற்பது நாளும் உன்ன பாக்க மாட்டேனோன்னு எங்கெல்லாம் அலைஞ்சேன் தெரியுமா, உன் செல்ல மகன் சாரு கூடவே இருந்து ஒரு வார்த்தை சொல்லல"

"சார், எனக்கு ஓரளவு புரிஞ்சது ஆனா, நான் நினைச்சது சரி தானான்னு முழுசா தெரிஞ்சிக்க கொஞ்சம் டைம் தேவை பட்டுச்சு, அப்புறம் அம்மாவை தனியா விட்டு போன உங்க மேல கோவம் இருந்தது, அதனால தான் கொஞ்ச நாள் அமைதியா இருந்துட்டேன், இருந்தாலும் உங்க உண்மையான அன்பு புரிஞ்ச பின்னாடி என்னால அமைதியா இருக்க முடியல, எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணும்ல அது இன்னைக்குனு இருந்திருக்கு அதான் எல்லாம் சரியா அமைஞ்சிடுச்சு"
"இப்பவும் கூட எனக்கு உன்மேல கோவம் தான்"

"சார், நான் வேணும்னே பண்ணல, அம்மா மேல இருந்த பாசத்தால"

"அம்மா மேல மட்டும் தான் பாசமா, இந்த அப்பா மேல இல்லையா, இன்னமும் சார் னு கூப்பிட்டா எப்படி"

"அப்பா, அப்பா என்ன மன்னிச்சிருங்கப்பா, இனி நீங்க எனக்கு சார் இல்ல, அப்பா தான்"
"என்னங்க, இத்தனை நாள் நீங்க அத்தை மாமாவை கூட பாக்காம விட்டுட்டீங்களே, நீங்க போன கொஞ்ச நாள்ல அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா, முதல்ல என் மேல கோவப்பட்டாலும், அப்புறம் நான் தாயகம் தொடங்கி தனியா வாழறேன்னு தெரிஞ்சப்போ எனக்கு முழு ஆதரவுமா அவங்க தான் நின்னாங்க"

"தப்பு தான் சகி, எல்லாரையும் விட்டு போனது தப்பு தான், அப்போ எனக்கு இதெல்லாம் யோசிக்க தோணல, இப்போ அம்மா அப்பா எங்க"

"புனித யாத்திரை போயிருக்காங்க, அதுவும் நீங்க திரும்பி வரணும்னு வேண்டிக்கிட்டு தான், இப்போ நீங்க வந்தது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க"

"இனி எல்லாருமே சந்தோஷமா மட்டும் தான் சகி இருக்க போறோம், நம்ப கஷ்டம் எல்லாம் போயே போச்சு"

"இந்த வயசுல இதெல்லாம் தேவையா, என்னால முடியாது, நான் இதெல்லாம் போட்டுக்க மாட்டேன்"

"அம்மா இத போட்டுக்க போறிங்களா இல்லையா, இப்போ நீங்க இத போட்டுக்கல அப்புறம் சாரு அண்ணாவை தான் கூப்பிடுவோம்"

"உங்களுக்கு நான் அம்மாடி, என்னையே இப்படி மிரட்டறீங்களா, இந்த வயசுல இதையெல்லாம் நான் போட்டுக்க முடியுமா"

"அம்மா இன்னைக்கு உங்களுக்கு அறுபதாம் கல்யாணம், இந்த நகையெல்லாம் போட்டுக்கலைனா நல்லா இருக்காது, இந்த புடவை உங்களுக்கு அழகா இருக்கும், பேசாம நாங்க சொல்றத கேளுங்க"

"முடியாது, முடியாது, முடியாது"

"இங்க என்ன பிரச்சனை"

"பாருங்கப்பா, அம்மா இந்த புடவை, நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க"

"சகி, எனக்காக"

"சரிங்க, போட்டுக்கறேன்"

"பாரேன் ரேணு, இத்தனை நேரமா அடம் பிடிச்ச அம்மா அப்பாவோட ஒரே வார்த்தைல சரினு சொல்லிட்டாங்க, எத்தனை வயசானாலும், வருஷம் போனாலும் அம்மா மேல அப்பாக்கு இருக்க காதலும் அப்பா மேல அம்மாக்கு இருக்க காதலும் மாறவே மாறாதுள்ள"

"ஆமா உண்மை தான், இங்க பாரு அக்கா நீ சொன்னதை கேட்டு அம்மாவோட முகம் சிவக்கறத"
"போங்கடி, போதும் உங்க கிண்டல்"
"யாரு என் அம்மாவை கிண்டல் பண்றது, அம்மா உங்க சாரு வந்துட்டேன் கவலையை விடுங்க"
"அண்ணா, அம்மா வெட்கப்படறாங்க அத தான் சொல்லிட்டு இருக்கோம்"

"என்னது அம்மா வெட்கப்படறாங்களா, ஓஹ் அதான் லைட் போடாமலே வீடெல்லாம் ஜொலிக்குதா"
"நீயுமா சாரு"
"பின்ன என்னமா, அவங்க சொல்றது உண்மை தான, அப்பா வந்தப்புறம் என் பேரு சாரு ஆச்சே, இதுல இருந்தே தெரியலயாமா, அப்பா முன்னாடி சாரதினு கூப்பிட வெட்கப்பட்டு தானே என் பேர சுருக்கிட்டிங்க"

"போதும், போங்க போய் வேலைய பாருங்க, நானே ரெடி ஆகிக்கிறேன்"
சொல்லிவிட்டு அறைக்குள் ஓடி தாளிட்டு கொண்டவளை கண்டு உள்ளமெல்லாம் பூரித்து போய் நின்றேன்....

அதுவரை எங்கள் பிள்ளைகளின் கேலி கிண்டலில் நிறைந்திருந்த வீடு என் சகியின் வெட்கத்தால் சிவந்த முகத்தில்இனிதே நிறைவடைந்தது......

சுபம்.................

எழுதியவர் : இந்திராணி (30-Dec-16, 5:07 pm)
பார்வை : 643

மேலே