மியா மியாவ்

ஏண்டி வைகை என்னடி அந்த டீவி பொட்டி வெளம்பரத்தில மியாவ்ன்னு சொன்னாங்க?
@@@@!
பாட்டிம்மா இப்ப ஒரு சினிமாப் படம் வெளியாகி இருக்குது. படத்தோட பேரு தான் 'மியாவ்'.
@@@
என்னடி அநியாயமா இருக்குது, சினிமா படத்துக்கெல்லாம் பூனை கத்தறதையெல்லாம் தலைப்பா வைக்கிறதா?
@@@@@
பாட்டிம்மா'மியாவ்' கொழந்தைங்களுக்காக தயாரிச்ச படம். அதில பொம்மைங்கள நடிக்க வச்சிருக்காங்க. நல்ல படம்ன்னு சொன்னாங்க.
@@@@@
ச ரி ஒரு கேரளா பொண்ணு பூனை கத்தற பேருல இருக்குதுன்னு சொன்னியே, அந்தப் பொண்ணு இந்த பூனைப் படத்தில நடிச்சிருக்கறகளா?
@@@@@

இல்லங்க பாட்டிம்மா. அந்த நடிகை பேரு 'மியா'.
@@@@
அதென்னடி 'மியா'-ன்னு பேரு. பூனை கத்தறதைச் சுருக்கி 'மியா'- ன்னு வச்சுட்டாங்களா?
@@@@
இல்லங்க பாட்டிம்மா 'மியா'-ங்கறது ஹீப்ரூ மொழிச் சொல்.
@@@@@
என்னது ஈப்புரூ மொழியா?
@@@@@
ஈப்புரூ இல்லீங்க பாட்டிம்மா. ஹீப்ரூ. அது யூதர்கள் பேசற மொழி. அந்த மொழில 'மியா'-ன்னா 'அன்புக்குரிய'-ன் னு அர்த்தம். பாட்டிம்மா நம்ம. தமிழோட சிறப்பு வேற எந்த மொழிக்கும் கெடையாது. நம்ம தமிழ் மொழில பெயர்ச் சொற்களத்தான் பிள்ளைங்களுக்கு பேரா வைப்போம். ஆனா மத்த மொழிங்கள்ல. பெயரடைச் (Adejctives) சொற்களையும், வினையடைச் (Adverbs) சொற்களையும் பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்தறாங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
In Hebrew Mia means 'beloved'

எழுதியவர் : மலர் (30-Dec-16, 5:50 pm)
பார்வை : 335

சிறந்த நகைச்சுவைகள்

மேலே