கொல்லாமை

அறத்தின் அடிப்படை அன்பெனக் கண்டேன்...
அன்பில் வேண்டியவர்,
வேண்டாதவரென்ற பாகுபாடில்லையென்று
உணர்ந்த மனிதன் உயிர்களின் அழிவிற்குக் காரணமாகுவதில்லை...
ஏனெனில்,
அவனறிவான், ஒரு உயிரிழந்த உடலினுள் அவ்வுயிரை திரும்பப் புகுத்த முடியாத தனக்கு, உயிருள்ள உடலில் இருந்து உயிரைப் பிரிக்கும் உரிமை இல்லையென்று...

உயிர்களைக் கொல்ல அனுமதிக்கும் நூல்களை அறநூல்களென எவ்வாறு ஏற்பேன்???...
அவ்வாறு உயிர்களைக் கொல்லலாமென்று ஏற்பேனென்றால், நான் பகுத்தறிவுள்ள மனிதன் அல்ல..
நாளும் வேட்டையாடி உயிர் குடிக்கும் கீழ்த்தரமான மிருகமென்பேன்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Dec-16, 6:35 pm)
Tanglish : kollaamai
பார்வை : 277

மேலே