விழித்தெழு பகுத்தறிவே

கண்ணில் பற்றுள்ளவர் கண்பதெல்லாம் உண்மையென்றார்...
காதில் பற்றுள்ளவர் கேட்பதெல்லாம் உண்மையென்றார்...
வாயில் பற்றுள்ளவர் பேசுவதெல்லாம் உண்மையென்றார்...
உடலில் பற்றுள்ளவர் புணர்வதெல்லாம் உண்மையென்றார்...
மூக்கில் பற்றுள்ளவர் முகர்வதெல்லாம் உண்மையென்றார்....

உண்மையென்று கூறியதோடு விட்டார்களா??..
இல்லையே..
நாளும் அவற்றையே சிறந்ததென்று
பறைசாற்றிக் கொண்டே இருந்தார்களே...
இருக்கிறார்களே...
இதன் தாக்கத்தால் விளைந்ததென்ன???...

உண்மையில் சிறந்தது எதுவென்று அறியும் பகுத்தறிவே தூங்கி போனது...
மனச்சாட்சி இல்லையென்றே மறுக்கிறான் இந்த மானிடன்...

காதல்நெறி தவறிய கதைகளையும்,
ரவுடித்தனத்தையும் நாளும் காட்சியாய் பிடித்து தீமைக்கு உரியவனை கதாநாயகனென்றே,
காசு மட்டும் சம்பாதிக்கும் நோக்கோடு பயணிக்கும் கலை உலகம் கண்டே கண்ணிரண்டும் கலங்குதே....

நாவாலுரைக்கக் கூசும் வார்த்தைகளைக் கூசாது மேடையில் உரைப்பவரை,
திறமையான பகுத்தறிவு பேச்சாளனென்று பறைசாற்றுதல் எவ்விதத்தில் நியாயமென்பீர்கள்???...

விழித்தெழு பகுத்தறிவே...
உண்மையை அறிய முற்படு பகுத்தறிவே...
சிறந்ததை நாடிச் செல் பகுத்தறிவே...
யாவரிடமும் அறியாமை அகற்று பகுத்தறிவே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Dec-16, 9:15 pm)
பார்வை : 259

மேலே