முதலாதவன்

முதல்(ஆத)வன்...

முதலாண்டின் முதல்நாளும் நீயே!
முதல்மாதம் முதல்வணக்கம் செலுத்துபவனும் நீயே!

உலகில் ஆயிரம் பெயர்களிருந்தாலும்..
உன்பெயரான ஆதவனுக்கிணை ஈடாகுமா?..

எழுச்சிக்கும் சுழற்ச்சிக்கும் எடுத்துக்காட்டு நீ!
எவ்வுயிரும் நிலைத்துவாழ உன்னருள் தேவைதானே!

தூங்குமுலகை துயில் எழவைப்பவனே!
உனைவணங்காவிடில் உலகம் உய்க்குமா!

உன்வலைமையறியாதவர்..
உனை இகழ்ந்தால் எரிந்து சாம்பலாவர்.

கருக்கலில் சுருக்கவெழவைப்பவனே

காலையில் யாருன்னைத் திட்டியது!.
காலைமுதல் கண்டவர்களையெல்லாம் சுட்டெரித்தாய்!

மாலையில் மெளனமானாய்!
யார் உன்னை சாந்தப்படுத்தியது!..

அந்தி சாயுமுன்காதலியான
சந்திர-னைக் கண்டு நாணுகிறாயோ?..

உன்னுதடு மட்டுமல்ல, வெட்கத்தினால்..
உன்முகம் முழுதும் முழுச்சிவப்பானதோ!.

புத்தாண்டின் தொடக்கம்போலவே...

இன்றுபோய் நாளைவா!
என்றும்போல் எழுச்சியுடன் எழுப்ப-வா!

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (1-Jan-17, 7:34 pm)
பார்வை : 300

மேலே