கனவுகள் கற்பனைகள் உங்கள் கைவசமிருந்தால்

- வாழு. வாழ விடு.! -

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்." "மனம் உண்டால் மார்க்கம் உண்டு"
"மனம் போல் வாழ்வு"

- என்றெல்லாம் எத்தனை முறையும் சொல்லிக்கூட நம் மனதை நம்மால் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெற முடியாமல் போவதற்கு காரணம்
மன உளைச்சல் தானே.!

'எனக்கில்லையே' என நீங்கள் சமாளித்தால் நீங்கள் ஒரு வெற்றியாளர் தான். அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கல்ல.

பின் யாருக்கு இந்த பதிவு? மன சோர்வு, மன உளைச்சல், மன அழற்சி இவையெல்லாம் நம்மை சீர்குலைக்கும் விஷயங்கள்.

எப்போதெல்லாம் தளர்ந்து போகிறீர்களோ அப்போது நீங்கள் கைக்கொள்ள வேண்டிய விஷயம் எது தெரியுமா?

அழகான கனவு, அளவான கற்பனை, அலாதியான பார்வை, அசத்தலான பேச்சு, அமைதியான மட்டுப்படுத்தப்பட்ட மன ஓட்டம் - இவை தான் உங்களை பரவசப்படுத்தி உசுப்பேத்தி உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும்.

கனவு என்பது நிகழ்காலத்தை ஒட்டி இருக்க வேண்டும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கனவு காணுங்கள். அதில் மாறுபட்ட நிலைகள் தோன்றினால் நீங்கள் செய்து கொள்ள வேண்டிய CORRECTIONS உங்களுக்கே புலப்படும்.

கற்பனை என்பது எல்லோருக்கும் வந்து விடும் தான், ஆனால் அதன் தரம் உங்களின் நினைவுப்பெட்டகத்திலிருந்து நீங்கள் சேமித்து வைத்த நல்ல மூலக்கூறுகளின் அடிப்படையில் அமையும்போது விசித்திரம் உங்களுக்குள் விளங்கி விடும்.

உங்களுக்குள் இதுவே நன்றாக புரிய வேண்டுமானால் உங்களை நீங்கள் ஒரு ஹீரோவாக நினைத்துக்கொள்ளுங்கள், ஒரு பாடல் காட்சியோ ஒரு சண்டைக்காட்சியோ ஒரு கிளைமாக்ஸ்சோ நீங்கள் அதில் புகுந்து விளையாடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்படியிருக்கும்போது உங்களுடைய உற்றோர் உறவினர் (வேணும் என்றால் அவர்கள் இல்லையா இருக்கிறார்கள் ஒரு அமலா, ஐஸ்வர்யாராய், ஒரு நம்பியார், ஒரு கவுண்டமணி, வடிவேலு - (கற்பனைக்கு இவர்களின் கால்சீட்டு எப்போதுமே கிடைக்கும்) இவர்களை உங்கள் முன் நிறுத்திக்கொள்ளுங்கள். அட்டகாசமாய் இருக்கும் அதன் ரிசல்ட்.

ஸ்ட்ரக் ஆன நிலையில் சட்டென்று சிலிர்த்துக்கிளம்பும் ஒரு கோழியாக ஆவீர்கள்.
அப்புறம் உங்கள் உயரத்திற்கு நீங்கள் பறக்கலாமே.!

எழுதியவர் : செல்வமணி (2-Jan-17, 10:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 600

சிறந்த கட்டுரைகள்

மேலே