விவசாயி

விவசாயி

உலகுக்கே சோறுமிடும் ஏழை இந்த விவசாயி நிலையதனை எண்ணி பாராய்
இல்லமையோ கல்லாமையோ ஏதுமின்றி வல்லமையோ உழைப்பெனவே வாழுமிந்த
விவசாயி இன்னுமே இருக்கானே ஏட்டில் தானே
வல்லவனாம் நல்லவனாம் என்றே நாமும் வாய்கிழிய பேசுகின்றோம் உண்மை என்ன
செல்லாத பணம் போல.சமுதாயத்தில் சீரழிந்த நிலையதனில் வாடுவோனை வையகமே மறந்ததுவோ என்னே விந்தை
சாமை கோழி கூவுமுன்னேவயலில் ஓடி
உச்சி வெய்யில் அத்தனையும் உயிரில் வாங்கி உயிரான வியர்வையதை நிலத்தில் பாய்ச்சி பாடுபடும்
உழவனிந்த நிலையை கண்டால் சுருக்கென்று தைக்காதோ உங்கள் நெஞ்சில்
உழவே தான் சரித்திரத்தில்
புரதணச்சின்னம் போல
திகழ்கின்ற கொடுமையினை கண்டால் நெஞ்சு
வேகுமந்த தீயை போல
கொதிக்கிறதே


  • எழுதியவர் : செல்வம் சௌம்யா
  • நாள் : 2-Jan-17, 11:29 am
  • சேர்த்தது : SELVAMSWAMYA
  • பார்வை : 34
  • Tanglish : vivasaayi
Close (X)

0 (0)
  

மேலே