சங்கே முழங்கு

தமிழ் சங்கே முழங்கு எத்திசையும்
ஒலிக்கட்டும் தமிழன் குரல் தரணியெங்கும்
ஏற்கட்டும் தமிழன் கைகள் கொலைவாளை
சீறிடுவோம் தமிழழிக்க எண்ணுவோனை எரித்திடுவோம் தடை போடும் மனிதமதை
பார்த்திடுவோம் இரண்டில் ஒன்று
தொன்று தொட்டு பட்டதுயரக தொலையட்டும் இன்றே இன்று
நொறுக்கிடுவோம் தமிழ்நெஞ்ச பகையதனை
தகர்க்கட்டும் தமிழனவன் வாழ்வு நித்தம்
தன்மான உணர்வுக்கே விலை போகட்டும்
காத்திடுவோம் தமிழனவன் வீரம் தன்னை
பார்த்திடுவோம்.தடை போடும்
வடவனவன் செயல் தன்னை
நடத்திடுவோம் ஜல்லிகட்டு இன்றே இன்று காணட்டும்
வடவரவன் தமிழனவன் வீரந்தன்னை
ஆளட்டும் நற்றமிழே அகிலமெங்கும்
அதன் பின்னே அமைதி கொள்ளும் தலைநிமிர்ந்த
தமிழன் நெஞ்சம்


  • எழுதியவர் : செல்வம் சௌம்யா
  • நாள் : 2-Jan-17, 12:23 pm
  • சேர்த்தது : SELVAMSWAMYA
  • பார்வை : 23
  • Tanglish : sange mulanggu
Close (X)

0 (0)
  

மேலே