ஆங்கிலம் என்ன அறிவியலா

ஆங்கிலம் என்ன அறிவியலா?

அறிவியலில் தான் நிரூபணங்கள் இருக்கும். இது சரி அது தவறு என்று பாகுபாடு இருக்கும் . அனால் எந்த ஒரு மொழியிலும் இவ்வாறு பகுத்தாயும் வழக்கம் கண்டிப்பாகத் தேவை இல்லை என்பதே நான் இங்கு வைக்கும் வாதம் ஆகும்.
இன்று " He is my family member" என்ற வாக்கியத்தை உபயோகித்தேன். என் அருகில் இருந்தவர் " சார், அப்படி வராது, இப்படி வரும் " He is a member of my family" என்று சொன்னார். ப் ஆ..... இவன் வேற னு முணுமுணுத்துக் கொண்டேன்.

பொதுவாக நம் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் கோவம் வரும், அதிலும் இப்படி வீணாய் போன ரூல்ஸை பேசுற ஆள் வந்து அறிவு ஜீவி மாதிரி பேசும் போதும் வாயில குண்டக்க மண்டக்க வரத் தான் செய்யும்.

" ஏன்டா தப்பு? எவன்டா சொன்னான் தப்பு னு ?" அவன் சட்டையை புடிச்சு இழுக்கனும் போல தோணுச்சு. என்ன செஞ்சு தொலையுறது " ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வான் " என்கிற புரிதலும் புரியாமலும் இல்லை. ஆதலால் , ஓ அப்படியா சார் , சரிங்க சார் னு ரப்பர் சிரிப்பை காட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

மெத்தபடிச்ச மேதாவிங்க ஊர்ல இப்படி நாலு பேர் திரியும். இவனுங்க கிட்ட பேசுறது டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட். சரி னு மண்டைய. ஆட்டிட்டு போய்ட்டோம் னா, சரி னு அது அதுபாட்டுக்குப் போய்டும். வாக்குவாதம் செஞ்சோம் னா, வீட்டுக்குப் போய் டிக்ஷ்னரிய புரட்டி " சார் காலைல நான் சொன்னேன்ல" னு நைட் சோறு திங்க போகும் போது போன் செஞ்சு மொக்கயப் போடும், நம்ம தூக்கமும் சேர்ந்து போய்டும். இது தேவையா நமக்கு.

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் ஒரு கருவி தான் ஒழிய, ஜல்லடை போட்டு அலசிப் பார்க்க அல்ல. போற இடத்துக்கு எல்லாம் ஜல்லடைய தூக்கிட்டு போனோம் என்றால் , நம்மல நாலு பேர் வீட்டுக்குத் தூக்கிட்டு தான் வரணும். நிஜமாகவே பெரிய லிங்குஸ்டிக் எர்ரர் ( linguistic error) விட்டிருந்தால், நாம் அதை சரி செய்து கொள்வதில் தவறில்லை. "He is my family member" க்கும் "He is a member of my family" க்கும் என்ன பெரிய மாறுபாடு வந்துவிடப் போகிறது?
எதோ கொஞ்சம் இங்கிலிஷ் வந்ததுக்கு அப்புறம், லண்டன் மருமகன் மாதிரி பேசிக்கிட்டு திரிவது உடம்புக்கு அவ்வளவா நல்லது இல்லை.

இந்த சுதந்திர பூமியில், மொழிக்கு கூட சுதந்திரம் இல்லையோ என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது.
விஜய்கணேசன்

எழுதியவர் : விஜய் கணேசன் (2-Jan-17, 2:46 pm)
சேர்த்தது : விஜய் கணேசன்
பார்வை : 322

மேலே