நிற்கிறேன் நான்

உன் இதழின் ஈரம் பார்த்து அந்த இறைவனும் கீழே இறங்கி வருவான்.
உன் கனவில் இடம் பிடிக்க இங்கு இருப்பவனெல்லாம் போராடுவான்.
உன் அழகை வர்ணிக்க பலர்
வரிசையில் நின்று சண்டையிடுவான்.
தினமொரு முறை உன்னை பார்க்க
தேவதையும் தரை இறங்குகிறாள்.
விண்ணுலகும் மண்ணுலகும்
உன் அழகிற்காக ஆசைபட
உன் அன்பிற்கு ஏங்கும் நான்
காலம் பல கடந்தும் உன் அன்பின் ஒரு துளிக்காக துயருடன் நிற்கிறேன் நான்.!!!

எழுதியவர் : அரவிந்த் (3-Jan-17, 8:31 am)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : nirkiren naan
பார்வை : 129

மேலே