உலகம் - ஒரு சிந்தனை

இந்த உலகம் ஏன் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது??

மனிதனின் இனவெறி தான் காரணம்...
தன் இனத்திற்கென தனிநாடு வேண்டுமென்ற எண்ணத்தால் உந்தப்பட்ட பகுத்தறிவால் ஏற்பட்டது...

ஏழு கண்டங்களாகப் பிரிந்தது இயற்கையாலென்றாலும், அவற்றை பல நாடுகளாக, இனம், மொழி, குலம், மதம், சாதியென பாகுபாடுகளடிப்படையில்,
பிரித்தது மனிதர்கள் தான்...

ஆரம்பக் காலத்தில் உலகம் ஒன்றாகவே அமைந்திருந்தது...
மக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், போட்டி, பொறாமை, களவு போன்ற தீயக்குணங்களால் அடித்துக் கொண்டார்கள்....

அப்படி அடித்துக் கொண்டவர்கள் பல குழுக்களாகப் பிரிந்தார்கள்,
நிறம், குலம் என்பவற்றின் அடிப்படையில்...
அந்த குழுக்களையே சமுதாயமென்று அழைக்கிறோம்...

இவ்வாறு சமுதாயமாகப் பிரிந்தவர்கள் தங்களுக்கென ஒரு தலைவனையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்...
அம்முறை நாகரீக வளர்ச்சி என்ற முறையில் தனித்தனி நாடுகளாக அதாவது மன்னராட்சிக்குப்பட்ட நாடுகளாக பரிணமித்தன்...
பல கொடுஞ்கோலன்களும், பல நல்ல அரசர்களும் இந்த உலகில் வாழ்ந்தார்கள்...
இந்த மன்னராட்சிக் காலத்தில் தான் பொழுதுப்போக்கு தொடர்பான விளையாட்டுகள் கொண்டுவரப்பட்டன...
அதில் வீரத்தை வெளிப்படுத்தும் காளை அடக்குதல், யானை அடக்குதல், குதிரைச் சவாரி, வேட்டையாடுதல் போன்றவை முக்கிய இடங்களைப் பிடித்தன...

பின்னர் பல பகுத்தறிவு சிந்தனையாளர்கள் தோன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார்கள்...
அப்படி முயன்றவர்களெல்லாம் அரசுக்கு எதிராக சதி செய்கிறார்களென்று தண்டிக்கப்பட்டார்கள்...
பலர் உயிரை விட்டார்கள்...
எண்ணற்ற சாதனையாளர்களை கண்டிருக்கிறது இந்த உலகம்...

மீண்டும் நாகரீக வளர்ச்சி ஏற்பட அதன் தாக்கத்தில் பல நாடுகளில் மக்களாட்சி முறை கொண்டுவரப்பட்டது..
அவ்வாறு கொண்டுவரப்பட்ட மக்களாட்சி முறையில் பல சூழ்ச்சிகளையும், இரகசியங்களையும் அரசியலமைப்புச் சட்டமென்று அமைத்தார்கள்...

இந்த மாற்றத்திற்குப் பிறகும் உலகில் சாதிகள், மதங்கள், மொழிகளென்ற பெயர்கள் எழுந்த பிரச்சனைகள் ஓயவில்லை...

ஒருபுறம் அறிவியலின் வளர்ச்சி எல்லையற்றதாகியது..
தகவல்தொடர்பு, தொழில்நுட்பம் என்று பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்பும் இந்த உலகில் மனிதர்களின் மனநிலை மாறவில்லை...
அதிகாலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது...
அதனால் எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைந்திருந்தாலும் இந்த மனவியல் துறையில் மிகப்பின்தாங்கியே இருக்கிறோம்...
இதுவே குற்றங்கள் முடிவில்லாமல் தொடர்கின்றன..
நாகரீகமென்ற பெயரில் அநாகரீகத்தை ஆதரிக்கிறோம்...
கிராமப்புறங்களிலும் சரி, நகரங்களிலும் சரி மக்களுடைய மனமும் சிந்தனையும் தனக்கென்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே சிறகடிக்கிறது...

ஒரு பேருந்தில் ஏறும்போது கூட, ஒழுங்காக வரிசைமுறையைப் பின்பற்றுவதில்லை...
சரக்கு ஏற்றும் லாரியில் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைப்பது தான் முறை..
அதே லாரியில் கண்டபடி முட்டைகளை வீசினால் அதிக மூட்டைகளை ஏற்ற இயலாது...

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரிசைமுறையைப் பின்பற்றினால், நம்ம மக்கள் என்ன பண்றாங்க??..
இடையில் நுழைந்து சீக்கிரம் வாங்கிவிட வேண்டும் என்றே நினைக்கிறார்கள்...
வியாபாரத்திலும் சரி,
கல்வியிலும் சரி,
விவசாயத்திலும் சரி போட்டி, பொறாமை மனப்பான்மையே காணப்படுகிறது...

" வயலில் உளுந்து விதைத்திருந்தேன்.
பத்து நாட்களுக்கு முன்பு பார்த்தேன்..
பயிர்கள் நன்றாக வளர்ந்து விளைந்திருந்தன...
இடையில் ஒரு வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன்..
திரும்பி வந்து பார்த்தால் என் வயலில் பயிர்களையே காணவில்லை.. பக்கத்து வயல்காரர்களிடம் கேட்டதற்கு தங்களுக்கு தெரியாது என்கிறார்..
அவர்களுடைய வயலில் சென்று நான் என்றும் திருடியதில்லை..
ஆனால், என்வயலில் விளைந்த பயிர்களைத் திருடிக்கொண்டார்கள்.
இறைவா! நீயே கேள்ளு. ", என்று வயதான மூதாட்டி கோயில் வேண்டிக் கொண்டிருந்தார்.. அவரை பார்க்கவே மிகப் பாவமாக இருந்தது...

இப்படி பக்கத்து வயலில் திருடும் குணமுடையவர்கள், பக்கத்துவீடுகளிலும்,
பக்கத்து ஊர்களிலும்,
பக்கத்து மாநிலங்களிலும்,
பக்கத்து நாடுகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்...

கல்வியை எடுத்துக் கொண்டால், பணமே கல்வியின் தகுதியை முடிவு செய்கிறது...
தங்களின் பிள்ளைகள் மேல் நம்பிக்கையில்லா பெற்றோரும் பணத்தைக் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்...

கல்வியின் உண்மையான நோக்கமே சிந்திக்க வைப்பது தான்...

சொல்புத்தி உடைய மனிதன் எப்போது பிறரை நம்பியே வாழ்கிறான்..
சுயபுத்தி உடைய மனிதனோ தன் சொந்தக்காலில் நின்று வாழ்கிறான்..

நம்மில் எத்தனைப் பேர் உண்மையில் அன்பு, கருணை, சுயநலமின்மை, அகிம்சை போன்ற நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்கிறோம்??...

செடி, கொடி, மரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உணர்வுகளைப் புரிந்து நடக்கிறோமா???...

இல்லை...

வீரம் என்கிறோம்.
எதை வீரமென்கிறோம்?.
காளை அடக்குதலை வீரமென்கிறோம்...
உண்மையில் அதுவா வீரம்...
இல்லை மானிடா.
உன்னை அடக்குதலிலே வெளிப்படும் உன் வீரம்...

கட்டற்ற காளையாகச் சுற்றி திரியும் உன் மனதை முதலில் அடக்கு..
அதன்பிறகு பிற உயிரினங்களை அடக்கலாம்...
இக்கருத்தைக் கூறுவதால் நான் தமிழ் இனத் துரோகி என்று நீங்கள் கூறினாலும்
அதைப் பற்றிய கவலை இல்லை...

அரசியலில் இருப்பவர்களைத் திட்டித் தீர்க்கும் யோக்கியவான்களே சற்று சிந்தியுங்கள்...
அழுக்கு உங்களுடைய மனதில் தான் அதிகமாக இருக்கிறது...

பணம், பணமென்று திரியும் பண்பில்லாதாரே!
சற்று சிந்தியுங்கள்..
உலகில் பணத்தையும், பொருட்களையும், உடைமைகளையும் தாண்டிப் மதிப்புடைய விடயங்கள் பல உள்ளன...

இன்னும் மனிதனால் சாதிக்கமுடியாத பல சாதனைகள் உள்ளன...
சிந்தித்து அவற்றை செயலாக்குங்கள்...

உங்களுக்கு நீங்களே நீதிபதியாகி உங்களிடம் காணப்படும் தவறுகளைக் களையெடுங்கள்...
இல்லையெனில் அதன் பலனாக பெரும் துன்பத்தையே அனுபவமென்று அனுபவிப்பீர்கள்...

உங்களைவிட வேறு எவராலும் உங்களைப் பற்றி உணர்ந்து உங்களுக்காகச் செயலாற்ற இயலாது...

மிக்க நன்றிகள் வாசித்த அனைவருக்கும்...


  • எழுதியவர் : அன்புடன் மித்திரன்
  • நாள் : 3-Jan-17, 3:04 pm
  • சேர்த்தது : AnbudanMiththiran
  • பார்வை : 524
Close (X)

0 (0)
  

மேலே