டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ் - சினிமா சிறு பார்வைகவிஜி

TALE OF TWO SISTERS

இரு சகோதிரிகள்.... ஒரு சித்தி.... ஒரு வீடு... கொஞ்சம் பேச்சு... நிறைய மூச்சு....ஒரு மாயம்.. கொஞ்சம் பிரமை... நிறைய நினைவு... ஆழம் அம்மா... அப்பா பதற்றம்.... மனது கீறல்..... காட்சி குளிர்ச்சி... கண்களில் அதிர்ச்சி... அவர்கள் தனி ... உலகம் பிணி...அவளாகும் தான்....தானாகும் சித்தி... திரைக்கதை யுக்தி.. திடும்மென இசை... கடைசி வரை புதிர்... கடைசியில் முதல்.. அடுக்கு தொடர் காட்சி.. அழகை செதுக்கும் ஆன்மா...ஆழம் அன்பு... அழுகை வலி.... மரணம் ரணம்... மானுடம் பிணம்... பார்த்த பிறகு... பார்க்கும்..... பார்வைக்குள்ளும் ஏக்கம்...துக்கமென நிற்கும்.... தூங்கா பாத்திர படைப்பு.... அமானுஷ்யம் அலறும்.... கனவென்ற ஹாஸ்யம்.... வெறுப்பின் மிச்சம்.. உயிர்ப்பின் அச்சம்.... காண காண காணாமல் போகும்.... கண்டவையாவும் அதுவாகி சாகும்....அன்பின் எல்லை.... இல்லவே இல்லை..... சாவின் பக்கம்.... சாவுக்கு இல்லை.....விவரிக்க இயலா துக்கத்தில்....... படக்கென விரித்து பறக்கும் சிறகில்லா பறவை... அது.... இதுவோ எதுவோவான சாபம்... மிச்சமென துளிர்க்கையில்....அது...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Jan-17, 7:56 pm)
பார்வை : 160

சிறந்த கட்டுரைகள்

மேலே