அடுத்த முறை உங்கள் கவிதை

ரீங்காரமிடும்
மென்சோகம்
இனம் புரிந்த வெறுமைக்குள்
தினம் பூசும் என் தேகம்
ஆடை துறத்தல் எதுவென்று
கேட்காத கேள்வி
சொல்லிய பின்னும் சொல்லுதலின்
தொடர்ச்சி
பசித்த புசித்த பசித்த
புசித்த தொடர் தத்துவம்
மிச்சம் இரு
என்ற முந்தைய பிந்தைய
உச்சம்
மயக்கத்தின் ஓசைக்குள்
மன ஊமைக்கும்
மயக்கம்
என்னிரு திசைகளில்
நானும் நானேவும்...
சாளரக் கசிவென
நுழைந்து கொண்டே
இருக்கும் எதிர்நிலை
அது
என் நிலை
கை வைத்ததும் எழுதி
முடித்து விட்ட
இப்பக்கத்தை குறைந்த பட்சம்
கவிதையாக்கியாவது
போங்கள்
இன்னொருமுறை படித்து...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Jan-17, 8:03 pm)
பார்வை : 129

மேலே