என்னடா பேரு வச்சிருக்கறீங்க

ஏண்டா தம்பி உம் பொண்ணுக்கு என்ன பேருடா வச்சிருக்கிறீங்க?
@@@
என்னக்கா இந்த மாதிரி கேள்வியக் கேக்கற? இது உனக்கே நியாயமா தெரியுதா?
@@@@
நம்ம தற்கால தமிழர்களின் வழக்கப்படி இந்திப் பேர வைக்கறதுதானே நாகரிகம், பண்பாடு, நியாயம், தர்மம்!
@@@@@
அதத்தாண்டா கேட்டன் தம்பி அறிவழகா.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அக்கா என் மனைவி செவ்வந்தி ஆசப்பட்ட மாதிரி அழகான இந்திப் பேர எம் பொண்ணுக்கு வச்சிருக்கறேன்.
@@@@@
அதத்தாண்டா கேட்டேன்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எம் பொண்ணுப் பேரு அப்ஜா.
@@@@@@
இந்தப். பேருதான் உஞ் செவ்வந்திக்குப் பிடிச்ச பேரா? அப்ஜா -வுக்கு என்னடா அர்த்தம்?
@@@@@
'நீரில் பிறந்த' -ன்னு அர்த்தம்க்கா.
@@@@@@
என்னடா இந்தி மொழில ஒருத்தோரட பேரக் குறிக்க மாதிரி பெயர்ச் சொற்களே கெடையாதா?
@@@|@@
அக்கா, இந்தி நம்ம தமிழ் மாதிரி தனித்து இயங்கக்கூடிய மொழி இல்லக்கா. இந்தில இருக்கற சமஸ்கிருதச் சொற்களையும் சமஸ்கிருத திரிபு சொற்களையும் தூக்கிட்டா இந்திய யாரும் பயன்படுத்த முடியாது. சமஸ்கிருதத்தில் உள்ள பெயரடைச் (Adjectives) சொற்களையும், வினையடைச் (Adverbs) சொற்களையுந்தான் பிள்ளைங்களுக்குப் பேருங்களா வைக்கறாங்க. தமிழர்களில் 98% பேரும் தமிழரல்லாத பிற இந்திய மொழிகளைப் பேசறவங்களும் இந்த மாதிரி பேருங்களத்தான் வைக்கறாங்க.

எழுதியவர் : மலர் (4-Jan-17, 1:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 166

மேலே