ஆசான் வாழி

கல்வி தந்த ஆசான் வாழி
கற்றுத் தந்த இதயம் வாழி
எம்மை வளர்த்த இறைவா வாழி
எம்மை செதுக்கிய சிற்பி வாழி

அன்பு நிறைய கொடுத்த போதும்
கோபம் கொஞ்சம் கொடுத்த துண்டு
பண்பாய் எமக்கு அறிவை ஊட்டி
சிந்தனை தெளிய அறிவுரை தந்தார்

புரியும் வரைக்கும் பாடம் நடத்தி
புரிய வைப்பதில் இவர் முன்னோடி
தெரிந்த தெல்லாம் சொல்லித் தந்தார்
மாணவர் இருந்தார் எப்பவுமிவர் பின்னோடி

கல்வி மட்டும் வாழ்க்கை அல்ல‌
விளையாடக் கூடச் சொல்லித் தந்தார்
அள்ளிக் கொடுத்தார் அவரது அறிவை
பள்ளி வாழ்வை மனதில் பதிந்தார்

ஏற்றம் கொள்ளும் யோசனை பலதை
சின்ன வயதில் தினமும் புகட்டி
மாற்றம் வாழ்வில் வருதல் நன்றென‌
என்றும் கற்பிக்கும் ஆசிரியர் வாழி...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-17, 10:11 pm)
Tanglish : aasaan vaazi
பார்வை : 289

மேலே