சாதி

ஜாதி

ஓடும் குருதியில் இல்லா ஜாதி
வழியும் விழுவுவர் நீரில் இல்லா ஜாதி
எங்கு தேடினும் இல்லா ஜாதி
மந்தரிடையே தோன்றியதேன்?
மதிமயங்கி தவறிழைப்பதும் ஏன்

முன்னை நம் சான்றோர் ஏற்படுத்திட்ட
செய்தொழில் அடிப்படைப் பெயரினையே
இன்றைய மாந்தர் புதுநெறி வகுத்தே
இயற்றிற்றான் பற்பல ஜாதியினை
ஏனோ வீழ்ந்திட்டான் பள்ளத்தில்

தன்கண்ணைத் தானே குத்திக் கொண்டு
தட்டுத் தடுமாறுகிறான் இருளினிலே
இதனால் ஏற்பட்ட ஏற்றா இறக்கம்
ஈவு இரக்கமற்ற பாதகச் செயலை
ஈண்டே புரியச் செய்ததுவே
மாண்டோர் இதனால் பற்பலரே!

பொன்போல் புத்தொளி வீசிட்ட
புவியோ வீழ்ந்தது சகதியிலே
புரண்டனர் பற்பலர் அதனிடையே
வாழவும் வீழவும் வழியின்றி
வறண்டு தவிக்கின்றனர் பாரினிலே

என்னே கொடுமை எங்கு நோக்கிலும்
என்று மறையுமோ இந்நிலமை?
‘பாரதி’ பாடலை மறந்திட்டான்
‘ஔவையின்’ அமுத மொழியினையும் எண்ணிடாமல்,
‘கவிமணியின்’ சொல்லையும் அன்றோ புறக்கணித்தான்

ஏனிந்த அவலம் இந்நிலமீதில்?
களைவோம் அறியாமை பதர்தனையே!
காண்போம் சமரசம் வாழ்வினிலே!
அடைவோம் பல நன்மைப் பாரினிலே!
மீண்டும் மலர்வோம் புதுநிலவென
புத்தொளி பரப்பி இப் புவி காப்போம்.

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (5-Jan-17, 2:50 pm)
பார்வை : 84

மேலே