காதல் பழக வா-3

காதல் பழக வா-3
"நீ யாரோ என
உன் விழி பார்க்காமலே
வாழ்ந்துவிட்டேன்....
நீ தான் என் இன்னுயிர்
என்பதை எப்படி
நான் உணராமல் இதுவரை
இருந்துவிட்டேன்"
"என்ன ராம் இது, ஏன் இவ்ளோ லேட், கிளைண்ட் கிளம்பிட்டாங்க, எல்லாம் பேசியாச்சு, நம்ப டீலர்ஷிப் டீட் மட்டும் டுமாரோ சம்மிட் பண்ணனும்......."

"சாரிடா, ஒரு சின்ன ஆக்சிடென்ட், அதான்......ரியலி சாரி கண்ணா"

அதுவரை மீட்டிங் சரியாக முடியவில்லையே என்ற டென்க்ஷனில் பேசிக்கொண்டிருந்த கண்ணன் ராமின் ஒரு சின்ன ஆக்சிடென்ட் என்னும் வார்த்தையில் தெளிந்து தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் ராமின் முகத்தை பார்த்தான்...

"டேய் ராம், என்ன ஆச்சுடா, நெற்றில எப்படி அடிபட்டுச்சு"

பதறி போய் பேச முடியாமல் கலங்கி நின்ற நண்பனை சில வினாடி பெருமையோடு பார்த்துவிட்டு நடந்தவைகளை விளக்கினான்....கண்ணனின் அன்பு எப்பொழுதுமே ராமுக்கு பெருமைக்குரிய விஷயமே, அந்த அன்புக்கு ராம் தன்னிடம் உள்ள எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு கண்ணன் ராமின் மேல் உயிரையே வைத்திருக்கிறான்.....

"இது தான் நடந்துச்சு, இதனால தான் மீட்டிங்க்குக்கு வர முடியலடா, அடி ஒன்னும் பெருசில்ல, ஜஸ்ட் சின்ன சிராய்ப்பு தான், ஆனா அந்த பொண்ணும் பையனும் தான் ரொம்ப டென்சன் பண்ணிட்டாங்க"

"ச்ச, இப்படியா கேர்லெஸா இருப்ப, அந்த பொண்ணும் பையனும் பத்தி டீடெயில்ஸ் எதாவது தெரியுமா, அவங்க வண்டி நம்பர் நோட் பண்ணியா, அவங்கள உண்டு இல்லனு பண்ணிடறேன், சொல்லுடா அவங்கள பத்தி உனக்கு என்ன தெரியுமோ எல்லாத்தையும் சொல்லு"

தன் நண்பனின் காயத்திற்கு காரணமானவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும் நோக்கத்தில் கண்ணன் மின்னல் வேகத்தில் பேசிக்கொண்டு போக ராம் சத்தம் போட்டு வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.......

"என்னடா சிரிக்கற, நான் எவ்ளோ டென்க்ஷன்ல பேசிட்டு இருக்கேன் தெரியுமா"

"கண்ணா, அவங்க சைக்கிள்ல தான் வந்தாங்க, சைக்கிளுக்கு பின்னாடி நம்பர் எதுவும் பார்த்த மாதிரி தெரியல, நீ வில்லன் ரேன்ஜ்க்கு பீல் பண்ணிட்டு இருக்கற மாதிரி எதுவும் இல்ல…. ரெண்டு பெரும் சின்ன பசங்க தான், எதோ தெரியாம பண்ணிட்டாங்க, என்ன …..சாரி கேட்டிருக்கலாம்....அதான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன், என் மனசுல எந்த பீல் இருந்தாலும் உன்கிட்ட மறைக்க முடியுமா, அதான் உன்கிட்டயும் சொல்லி உன்னையும் டென்சன் பண்ணிட்டேன்...இந்த விஷயத்தை இதோட விட்ருடா.....ஓகே வா"

சிலவினாடிகளுக்கு முன்னால் ரசித்து சிரித்துக்கொண்டிருந்த ராமின் முகம் நினைவுக்கு வர கண்ணனின் டென்சன் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது....

"சரி கண்ணா, எனக்கு நம்ப மாடர்ன் சிட்டில கொஞ்சம் வேலை இருக்கு, நான் கிளம்பறேன், நீயும் போய் வேலைய பாரு, அடுத்த வாரம் நாம பிளான் பண்ணிருக்கற பிக் ப்ராஜெக்ட் முடிச்சே ஆகணும், சோ வேற எத பதியும் நாம திங்க் பண்ண கூடாது"

"ஓகே ராம், நீ கிளம்பு...நான் இப்போ அந்த ப்ராஜெக்ட் பத்தி தான் கொஞ்சம் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண போறேன்.....நீ உன் ஒர்க் முடிச்சிட்டு கால் பண்ணு,ரெண்டு பெரும் லன்ச்ல மீட் பண்ணலாம்"
எந்த நேரமும் வேலை வேலை என்று வேலைக்கு பின்னால் ஓடி கொண்டிருக்கும் ராம், கண்ணனின் வாழ்க்கை அடுத்த நாளில் இருந்து மாற போகிறது என்ற அறிந்து கொள்ளாமல் அடுத்த வாரத்தில் நடக்கும் ப்ராஜெக்ட் பிளான் பற்றி நினைத்து கொண்டிருப்பது அவர்களின் அறியாமையே தான்......

"ராதிமா, நான் சொல்றதை கேளு, நாளைக்கு மட்டும் நீ கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ, இனி உன் விருப்பமில்லாம இப்படி நடந்துக்க மாட்டோம்...இப்போ வந்திருக்க சம்மந்தம் ரொம்ப பெரிய இடம், ரொம்ப நல்லவங்க, பையனுக்கு எந்த குறைச்சலும் இல்ல...நீ வேண்டாம்னு சொல்றதுக்கு எந்த ரீசனும் இல்ல.....பொண்ணு பாக்கற சடங்கு கூட உனக்கு அன்ஈஸியா இருக்கக்கூடாதுனு கோவிலிலேயே வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க, நாளைக்கு நீ கோவிலுக்கு வந்து பாரு, பிடிச்சிருந்தா ஓகே, இல்லையா விருப்பமில்லன்னு சொல்லிடலாம்"

"என்னங்க நீங்க இவளுக்கு இவ்ளோ தூரம் செல்லம் குடுத்து பேசினா அவ முடியாது முடியாதுனு தான் சொல்லிட்டு இருப்பா, இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது, அவங்களுக்கு வாக்கு கொடுத்தாச்சு, நாளைக்கு கோவிலுக்கு வர்றதா சொல்லிட்டோம்...இனி இத மாத்த முடியாது , வந்து தான் ஆகணும்னு சொல்லுங்க, அத விட்டுட்டு கெஞ்சிட்டு இருக்கீங்க"

"அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல, இப்போ தன் படிப்பு முடிச்சிருக்கேன், பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பொட்டிக் ஷாப் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம், அத தொடர்ந்து பியூட்டி பார்லர், பேஷன் டிரஸ் ஷாப்..இப்படி நிறைய பிளான் வச்சிருக்கோம்..எல்லாமே முடியற ஸ்டேஜ்ல இருக்கு, இந்த நேரம் பாத்து கல்யாணம்னு சொன்ன என்ன அர்த்தம், இதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு தானே பண்ண ஆரம்பிச்சேன், இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லறதெல்லாம் சரி இல்ல, அது மட்டும் இல்லாம அம்மாக்கு என் மேல சந்தேகம், நான் யாரையோ லவ் பன்றேன்னு...அன்னைக்கு நடந்ததெல்லாம் எனக்காக இல்ல, என் பிரென்ட் ஒருத்தி லவ்க்கு ஹெல்ப் பண்ண போய் கடைசில நான் மாட்டிகிட்டேன்...எவ்ளோ தூரம் எடுத்து சொன்னாலும் புரிஞ்சிக்காம பேசினா என்ன பண்ண முடியும்"

"நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், நாளைக்கு கோவிலுக்கு வந்து அவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கோ அது போதும், நீங்களே உங்க செல்ல மகளுக்கு புரிய வைங்க"
"ராதிமா"

"சரிப்பா, நான் வரேன்...."

எல்லாம் இந்த ரேணுவாலே வந்தது, அவ லவ் சேத்து வைக்க ஹெல்ப் பண்ண போய் இப்போ அம்மாகிட்ட எனக்கு கேட்ட பேரு, ஒரு மாசம் முன்னாடி ராதிமானு என் பின்னாலயே சுத்திட்டு இருந்த அம்மா இப்போ என்கிட்ட சரியா கூட பேச மாட்டேங்கறாங்க, இதுல இந்த பொண்ணு பாக்கற சடங்கு வேற, எப்படி தான் இவங்களுக்கு ப்ரூவ் பண்றதோ....நான் யாரையும் காதலிக்கல, எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்லனு, கடவுளே நீ தான் எனக்கு நல்ல வழி காட்டணும் ......

அடுத்த நாளே கடவுள் ராதிக்கு நல்ல வழியை சில வலிகளோடு காட்ட போறாருனு ராதிக்கு புரிய இன்னும் கொஞ்சம் பக்குவம் தேவைப்படும்...

எழுதியவர் : இந்திராணி (5-Jan-17, 3:31 pm)
பார்வை : 556

மேலே