அவள் ஓர் அறிமுகம்

அவள்
வள்ளுவனின்
அணங்குகொல் ஆய்மயில்

வைரமுத்துவின்
அதிர்ந்து பேசாத வீணை

இலக்கியம் இயம்பும்
கணங்குழல் மாது

கண்ணதாசனின்
கால வசந்தம்

கம்பன் வடித்த
காவிய நாயகி

பாரதியின்
கவிதை காற்று

பாலகுமாரனின்
பகலிலே வரும் நிலா

பருத்திக்காடு பறக்கவிட்ட
பஞ்சுப்பொதி

இளங்கோவின்
சப்தமில்லாச் சிலம்பு

இளையராஜாவின்
வாத்திய வசியம்

சிலருக்கே சொந்தமான
சிரிப்புக்கு சொந்தக்காரி

நடந்தே போகும்
நயாகரா

மலரைச் சூடாத
மலர்

மகுடம் சூடாத
மஹாராணி

மணியன் செல்வனின்
தூரிகை பிரசவம்

எழுதியவர் : அன்புச்செழியன் (6-Jan-17, 9:01 am)
Tanglish : aval or arimugam
பார்வை : 100

மேலே