காதல் பழக வா-4

காதல் பழக வா-4

மணக்கோலம் கொண்டு
நான் காத்திருக்க
மணமுடிக்கும் நாளோ
நம்மை பார்த்திருக்க
என் மனையாழினியாய்
வருவாயோ நீ??
உன் கழுத்தில்
மாங்கல்யம் முடித்துவிட
ஆசையோடு நான்.....

"ராதிம்மா, சீக்கிரம் கிளம்பு......இன்னைக்கு வேற சுபமுகூர்த்தம், நல்ல நேரத்துலயே கோவிலுக்கு போய்டணும், அப்போ தான் எல்லாம் நல்லதா நடக்கும்"

என்ன நல்ல நேரமோ, நீங்க என்ன பண்ணாலும் நான் என் முடிவை மாத்திக்க போறதில்லை, சீக்கிரமே நீங்களும் புரிஞ்சிப்பீங்க....

தன் முடிவில் உறுதியாக இருந்தாலும் அம்மாவின் வற்புறுத்தலுக்காய் ராதி கோவிலுக்கு செல்ல தயாரானாள்.....

"அம்மா, இந்தாங்க..இது உங்களோட கிப்ட்......பர்த்டே கிப்ட்...பிடிச்சிருக்கானு பாருங்க...."

"கண்ணா, என் பிறந்த நாளை நீ மறந்திருப்பேனு நினச்சேன், ஆனா ஞாபகமா பரிசுலாம் குடுக்கற, இந்த புடவை ரொம்ப அழகா இருக்குப்பா, எனக்கு பிடிச்ச மயில் கலர்...நிஜமாவே இந்த பரிசு எனக்கு பிடிச்சிருக்கு"
"எனக்கு தெரியும்மா, நீங்க நான் என்ன வாங்கி குடுத்தாலும் பிடிச்சிருக்குனு தான் சொல்விங்க, ஓகே மா....ஈவ்னிங் பர்த்டே பார்ட்டி அரேஞ் பண்ண போறேன், நம்ம பேமிலி பிரண்ட்ஸ், உங்க தம்பி,தங்கை பேமிலி, அப்புறம் அப்பாவோட அண்ணன், தங்கை பேமிலி, எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சு, இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டி களை கட்ட போகுது...நிச்சயமா இந்த பார்ட்டியும் உங்களுக்கு பிடிக்கும்"

"நான் உங்கிட்ட ஒன்னு கேட்கலாமா கண்ணா?"

"அம்மா என் கல்யாணத்தை தவிர நீங்க வேற எதை பத்தி வேணாலும் கேட்கலாம், பேசலாம்"

"கண்ணா, அதை தவிர கேட்கறதுக்கு வேற என்ன இருக்கு, நீ இப்படியே பிரம்மச்சாரியா காலத்தை ஓட்டலாம்னு நினைக்கிறியாப்பா"

"அப்டிலாம் இல்லமா, உங்களுக்கு ப்ரோமிஸ் பண்றேன், எனக்கு தோணறப்போ நிச்சயமா கல்யாணம் பண்ணிப்பேன்...எனக்கு தோணற பொண்ணோட கழுத்துல தாலி கட்டி உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப்பேன்...இதெல்லாம் நிச்சயம் நடக்கும்.....சோ நீங்க கவலைப்படாம இருங்க"

"எப்படியோ நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் அதுவே எனக்கு போதும், சரிப்பா நான் சொல்றத கேட்பியா?"

"அம்மா இப்போ தான சொன்னேன், கல்யாணத்த பத்தி பேசாதிங்கனு..திரும்பவுமா"

"அதில்லப்பா, இன்னைக்கு சுபமுகூர்த்த நாள், நம்ப குலதெய்வ கோவில்ல இன்னைக்கு பத்து ஜோடிக்கு கல்யாணம் நடக்க போகுது, என் பிறந்த நாள் பரிசா அவங்களுக்கு தாலி, புடவை எடுத்து தறதா நான் பூசாரிக்கிட்ட சொல்லிருக்கேன், இப்போ அங்க தான் கிளம்பிட்டு இருக்கேன், எல்லாமே கோவிலுக்கு அனுப்பியாச்சு, நாம போய் அவங்கள வாழ்த்தறது தான் வேலை....நீயும் என்கூட வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன், என்ன நீ என்கூட வருவியா கண்ணா"

"அம்மா, இன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு...ஒரு டீட்ல சைன் பண்ணனும், அதுவும் ஒரு மணி நேரத்துல சம்மிட் பண்ணனும், இப்போ எப்படி நான் அங்க வர முடியும்"

"அம்மாக்கு பிறந்தநாள் பரிசா நீ என்கூட கோவிலுக்கு கூட வரமாட்டியா"

"அம்மா, அது.........ஓகே மா போகலாம், ஆனா கோவில் போய்ட்டு சீக்கிரம் நான் கிளம்பிடுவேன், அப்புறம் நீங்க கோவிச்சிக்க கூடாது"

"சரிப்பா, நீ கொஞ்ச நேரம் இருந்தா கூட போதும்"

"சரிம்மா, கிளம்பலாம்"

"இப்படியேவா?"

"ஏன், இந்த ட்ரெஸ்க்கு என்ன குறை?"

"நாம கோவிலுக்கு போரோம்ப்பா, அதுவும் கல்யாணத்துக்கு....இந்தாப்பா, இந்த பட்டு வேஷ்டி சட்டையை போட்டுக்கோ, உனக்காக நான் வாங்கினது......"

"அம்மா கல்யாணத்துக்கு தன் போறோம், ஆனா எனக்கு கல்யாணம் இல்ல, இந்த வேஷ்டி சட்டையை போட்டுட்டு எப்படிம்மா நான் ஆபிஸ்க்கு போக முடியும்"

"சரிப்பா, உன் விருப்பம்"

"அம்மா...உடனே கோவிச்சிப்பீங்களே, சரி இந்த டிரஸ் போட்டுக்கறேன், பைவ் மினிட்ஸ், வந்துடறேன்"

பைவ் மினிட்ஸ் என்று போன கண்ணன் வேஷ்டி சட்டையை அணிவதற்க்கு அரை மணி நேரம் போராட வேண்டியதாகி இருந்தது...

"கண்ணா, கிளம்பிட்டியாப்பா, நேரம் ஆச்சு"

"வந்துட்டேன் மா, கிளம்பலாம்"

பட்டு வேஷ்டி சட்டையில் என் மகன் மாப்பிளை போல தான் இருக்கிறான், எப்படியோ, நான் ஏற்பாடு செய்திருக்கும் எல்லாம் நல்லவிதமாய் நடந்து கண்ணனுக்கு கல்யாண பிராப்தம் சீக்கிரமே கிடைக்க வேண்டும்...
தாயின் உள்ளம் வேண்டுவதெல்லாம் இறைவன் சீக்கிரமே நிகழ்த்திவைப்பானோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்ணன் விஷயத்தில் அந்த இறைவன் வெகு சீக்கிரமே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தப்போகிறான்...

எழுதியவர் : இந்திராணி (6-Jan-17, 11:53 am)
பார்வை : 589

மேலே