நாம என்ன அண்ணே செய்யறது

அண்ணே, நம்ம முன்னோர்கள் விஜயநகர பேரரசின் ஆட்சியின் போது இன்றைய ஆந்திராவின் தெற்கு எல்லை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில குடியேறினவங்க. நம்ம தாய் மொழி தெலுங்கு. ஆந்திராவில் நடைமுறையில உள்ளபடி நம்ம ரண்டு பேருகூட சாதிப் பேரையும் சேத்து வச்சுட்டாங்க. நாம இப்ப பெரிய கோடீஸ்வரங்க. தமிழ் நாட்டில இருக்கற பெரிய கட்சிங்கள் எல்லாம் அவுங்க கட்சில சேந்தா நமக்கு ரண்டு தொகுதிங்கள ஒதுக்கித்தர்றோம்னு சொல்லறாங்க.
☺☺☺☺☺☺
ஆனா சாதி அடிப்படையிலே வாக்கு கேக்கறது சட்டப்படி குற்றம்னு சொல்லறாங்க.

☺☺☺☺☺☺☺
எம் பேரு காமி நாயுடு உங்க பேரு சாமி நாயுடு.

☺☺☺☺☺☺
நாம தேர்தல நின்னா "காமிக்கு வாக்களியுங்க, சாமிக்கு வாங்களியுங்க" -ன்னு கேட்டா வாக்கு சேகரிக்க முடியும்?
☺☺☺☺☺
நம்ம முழுப்பேருங்கள சொன்னா நம்ம சாதியும் அதுல வந்திடுமே. அதுதான் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்குதண்ணே.
☺☺☺☺☺☺☺☺
#####################
கூர்சசுரா காமி. தமிழ் நாடு புதுச்சேரி தவிர எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலான அரசியல்வாதிகள், பிரபல: நடிகர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அறிவியல் அறிஞர்கள், அரசு அதிகாரிகள் உலகப் பகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் எல்லாம் அவுங்கவுங்க சாதிப் பேருங்கள அவுங்க பேருங்களோட எணச்சுக் கொள்ளறதுதான் நடைமுறைல இருக்குது. நம்ம ஆந்திரா முதல்வர் (சந்திரபாபு நாயுடு) பேரோட அவுரு சாதிப்பேருந்தா இருக்குது. சாதிங்கள எந்தக் கொம்பனாலயும் இந்த லோகம் இருக்கற வரைக்கும் ஒழிக்க முடியாது. கவலை காதுடா காமி. அதானல நமக்கு எந்தப் பாதிப்பும் இல்ல. தமிழ் நாட்டுள்ள பலம் வாய்ந்த கட்சிகங்க ரண்டு இருக்குது. நீ ஒண்ணுல சேரு. நா ஒண்ணுல சேந்துக்கறன். நாம ரண்டு பேரும் செயிக்கறது உறுதி. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு நல்லதுதான். கவல வேண்டாம்டா தம்முடு காமி.
@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. உதாரணத்திற்காக ஒரு வகுப்பின் பெயரைக் குறிப்பிட்டேன். நான் தமிழன், இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். சாதியும் சாதி அமைப்பும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை.

எழுதியவர் : மலர் (6-Jan-17, 3:56 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே