தெருவடிக் குடிநீர்க் குழாய்

தெருக்குழாயில் சென்று குடிதண்ணீர் பிடிக்க நின்றேன் கையில் குடத்துடன்...
அதைப் பார்த்த பக்கத்துவீட்டு அக்கா, " என்ன எழுத்தாளரே! ஒரு நாளும் இல்லாத திருநாளா இந்தப்பக்கம்?.. ", என்றார் கிண்டலாக...

அதற்கு, " தண்ணீர் பிடிக்க வந்தேன் அக்கா. ", என்றேன் புன்னகையுடன்...

அதைக் கேட்ட எதிர்த்த வீட்டு பெரியம்மா, " பெரியாளு நீங்களெலாம் இங்க தண்ணீ பிடிக்க வரலாமா?? . ", என்றார்கள் கிண்டலாக..

உடனே நான், " பெரியம்மா நீங்களுமா என்ன இப்படி கிண்டல் பண்றது? ", என்றேன் சற்று கோபம் கொள்வது போல...

அதை பார்த்த தண்ணீர் பிடித்துக்
கொண்டிருந்த, என் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டிலிருக்கும் பாட்டி, " ஏ புள்ளையா! என்ன என் பேரனை எல்லாரும் கிண்டல் பண்றீங்க?.
அவனுக்கு உங்களை மாதிரி பேச தெரியாதுனு நினைச்சுக்கிட்டா. நான் இருக்கேனாக்கும். நீ வாடா பேரான்டி? அவளுகளுக்கு வேற வேலை இல்லை.. ", என்று கூறியவாறு குழாயில் தண்ணீர் பிடிக்க வழிவிட்டார்...

" அப்பாட பாட்டி வந்ததுனால தப்பிச்சேன்டா சாமி. ", என நினைத்துக் கொண்டு, குடத்தில் தண்ணீரை பிடித்துத் தூக்கிக் கொண்டு வந்தேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Jan-17, 8:36 pm)
பார்வை : 298

சிறந்த நகைச்சுவைகள்

மேலே