கவிதை வேண்டுமா

கவிதை வேண்டுமா

கவிதைகள் வேண்டுமா???
அன்பே,

உந்தன் அழகை அனுதினமும்
அகங்காரத்துடன் ஏந்திக்கொள்ளும் நிலை கண்ணாடியில்...
உன் ரசக்குள்ளா கண்களை உயர்த்தி காட்டு...

அதில்,
சிரித்தக்கொண்டு
சிறை கைதியாக
நான் தெரிந்தால்,
என்னுடனே
ஆயுள் தண்டனை பெற்று
ஓராயிரம் கவிதைகள்
வழிந்திருக்கும்...

ஒருவேளை அதில்
இயற்கையின் அழகை குத்தகைக்கு எடுத்து நிலவின் அக்காவாக
நீ தெரிந்தால்
மொழிகளும் உயிர் பெற்று
எழுத்துக்கலெல்லாம் கூத்தாடி
இலட்சம் கவிதைகள்
விழித்திருக்கும்...

ஒருவேளை அதில்,
கைக்கோர்த்தபடி நம்மோடு
காதலும் இணைந்து
தெரிந்தால்
சுற்றும் உலகம் நின்று
என்னுலகம் உன்னை மட்டும் சுற்றி
கோடி கவிதைகள்
பிறந்திருக்கும்...

"இதில் எதுவுமே இல்லை
நீ ஏமாற்று பேர்வழி
நீ பொய் சொல்கிறாய்"
என்று நீ வாதிட்டிருந்தால்
உன் உதடுகளை போல்
உந்தன் கண்களும்
நடிப்பு பயிற்சி பெற்று
இமைக்கின்ற போதெல்லாம்
நூறு கோடி
பொய் நிறைந்த கவிதைகள்
உயிர் பெற்றிருக்கும்...

அன்பே,
இவ்வளவு ஆணித்தரமாக
நான் சொல்ல காரணம்
என்னவென்று நீ அறிவாயா???

உன்னை பார்த்து நான் காதலானதைவிட,
உன் கண்களை மட்டுமே பார்த்து நான் கவிஞன் ஆன
காரணத்தினால்
சொல்கிறேனடி...

மௌன பசையை ஒட்டிக் கொண்டு
பிரிக்காமல் வைத்திருந்த
உன் இதழ்கள் பேச மறந்ததை..........

பிரித்து வைத்திருந்த
உன் இமைகளின் நடுவில்
குடியிருந்து
என்னை பந்தாடுகிற
உந்தன் பகடை கண்களில்
கண்டேனடி...
"எனக்காக எழுத பட்ட
என் கவிதையை"... !!!


Close (X)

10 (5)
  

மேலே