இந்த உலகமே நாம் வாழும் கருவறை

அம்மாவோடு இருப்பவர்களுக்கும், அம்மா இல்லாதோருக்கும்,
பல அம்மாகளுக்கும் தாயாக விளங்கிறதே இந்த பூமி.
இதை அறியாத நாமே மூடர்களாகவே புலம்பித்திரிகிறோமே.

சதைகளால் ஆனது மட்டும் தானா கருவறை??..
கற்கள், மண், மணல், நீரென நாம் ஒவ்வொருவரையும் பொறுமையாய் சுமக்கிறதே இந்த பூமி.
இது தானே சிறந்த கருவறை.

இங்கு ஒவ்வொருவரும் இந்த பூமி தாயின் சிறு பிள்ளைகள் தான்.
மனிதர்களாகிய நாம் மட்டுமா??..
எண்ணற்ற விலங்கினங்கள், எண்ணற்ற பறவையினங்கள், எண்ணற்ற நீர்வாழ் உயிரினங்கள்,
எண்ணற்ற தாவரங்கள், எண்ணற்ற மரங்களென அனைத்திற்கும் இந்த பூமி ஒரு கருவறை தானே...

புரிதலில்லா மனிதர்களே!
கவலைகளில் மூழ்கி,
கனநேரமும் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேனென்று கதையளக்கும் முன் நிகழ்க்காலத்தை சிந்தியுங்கள்...
உணருங்கள்...

அம்மா அருகில் இருக்கும் மற்றும் இல்லாத வேளைகளிலும்,
பரம்பொருளே! பூமியில் நிலமாய், காற்றாய், நீராய், ஆகாயமாய், சூரியனாய், சொல்லிலடங்கா எண்ணற்ற வடிவமாய்,
கருவறையைப் போல் நம்மை வாழ வைக்கிறதே...
இதை உணராமல் துன்பங்களை நினைத்துக் கொண்டு,
ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்கிறோமே,
உண்மையில் நாம் பகுத்தறிவுள்ள மனிதர்கள் தானா???..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Jan-17, 9:16 pm)
பார்வை : 952

மேலே