மாவிதை தாய்மார்களின் முதல் கரு

மாவிதை
( தாய்மார்களின் முதல் கரு )
ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள்? அவள் தாயாகும் போது மட்டுமே. ஒரு பெண் தாயாகும் போது தான் பெறவிருக்கும் குழந்தைக்கு மட்டுமல்லாது, தன்னை சுற்றியுள்ள அனைத்திற்கும் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் இயல்புடையவள்.
தன் இரத்தத்தையே பாலாக்கி கொடுக்கும் பல தாய்மார்கள் இன்றளவும்சோக கண்ணீர் வடிக்கும் தாய்களாக சொந்த வீட்டில் அனாதையாக இருக்கும் நிலையே பற்றிய சிறு கதை உங்கள் வாசிப்பிற்கு.
சமஷ்வர், சஜிதாஇருவரும் தங்கள் உறவில் வென்று, குடும்ப உறவுகளில் தோற்ற ஒரு தம்பதியர் , ஆம் இருவரும் தங்கள் காதலில் வென்று வேறு எந்த சொந்தமும் இல்லாதவர்களாய் இருவரும் இருக்கும் நிலையில் தான் சஜிதா கருவுற்றாள். தங்களுக்கும் புதிய சொந்தம் வரவிருக்கிறது என்பதை எண்ணி இருவரும் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடைந்தனர். அந்த கருவின் மீது இருவரும் அக்கறை செலுத்த ஆரம்பித்து ஏழு மாதங்கள் கழிந்தன.
அருகில் கூட வீடு இல்லாத நிலையில் ஒரு சிறிய வீடு, தோட்டம் அமைக்கும் அளவிற்கு வீட்டின் பின்ப்புறம் சிறிது இடம் இது தான் இவர்களுடையே இப்போதையே சொத்து. சமஷ்வர் ஒரு சர்க்கரை ஆலையில் கூலி வேலைக்கு சேர்ந்து கஷ்டப்பட்டு இப்போது தான் பதவி உயர்வு பெற்று நல்ல ஊதியம் பெற தொடங்கியுள்ளான்.
சமஷ்கடந்து போன ஏழு மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் அந்தெந்த மாதத்தில் விளைகின்ற கனிகளை வாங்கிக்கொடுக்க, அவற்றின் விதைகளை தன் வீட்டின் பின்புற இடத்தில் நட பல வகையான பழக் கன்றுகள் வளர்வதைக் கண்டு இருவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.இவற்றிற்குதண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பது போன்ற வேலைகளை தொடர்ந்து சஜி செய்ய, அவளது கருவும் நன்கு வளரச்சி அடைவதை மருத்துவர் உறுதி செய்தனர்.
ஆனாலும் ஒரு சிறு கவலை அவள் மனதை துன்புறுத்திக் கொண்டே இருந்தது. அது ஒன்றும் இல்லை பல வகையான பழக் கன்றுகள் வளரும் தன் தோட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு பிடித்தமான மாங்காய் கன்று இல்லை என்பது தான். தான் இதுவரை சாப்பிட்டுவிட்டு போட்ட மாங்கொட்டைகள் முற்றாத காரணத்தால் அவை முளைக்கவில்லை. ஒன்பதாவது மாதம் நடக்கும் நேரத்தில் தன் மனைவியின் கவலையே தீர்க்க சமஷ்வர் சில மாம்பழங்களை வாங்கி கொண்டு சஜியிடம் கொடுக்க அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
உடனே அதை சாப்பிட்டு விட்டு தன் தோட்டத்தில் ஊன்றி வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வருகிறாள். இதுவரை மாவிதை முளை விட ஆரம்பிக்கவில்லை.
ஒரு நாள் மாவிதை முளை விட அதனை பார்த்து கொண்டு இருக்கும் போது திடீரேன்று சாஜிக்கு பிரசவ வலி ஏற்ப்பட உடனே அவளை மருத்துவ மனையிக்கு அழைத்து செல்ல்கிறான். அங்கு அவளுக்கு சுயபிரசவம் நடக்க, ஒரு குழந்தை என்று இருந்த அவர்களுக்கு பிறந்தது இரு குழந்தைகள். அதில் ஒரு பெண், ஒருஆண். இன்பத்திலும்மிகபெரிய இன்பம் இது தான் என்று அவர்கள் எண்ண,
சஜிதா அந்த மாங்கன்று முளைக்கும்தன் பிள்ளைகள் பிறப்பிற்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று எண்ணி மாங்கன்றை தன் முதல் கருவாக , பிள்ளையாக எண்ணி வளர்க்க ஆரம்பித்தால்.
இதனிடையில் விட்டு போன சொந்தங்கள் பிள்ளைகள் பிறப்பால் ஒன்று சேர இன்பத்தின் உச்சியில் இருந்து சிறிதும் இறங்கவில்லைசஜியின் வாழ்க்கை.இதனிடையில் சொந்தங்களால் கிடைத்த கொஞ்ச நிதியை வைத்து தன் வீட்டையும், தோட்டத்தையும் விரிவு படுத்தினாள்.
காலங்கள் கவலையின்றி கால் எடுத்து வைத்து சென்ற போது துன்பம் காலை வாற அதில் சமஷ் இறக்கிறான்.சமஷ் இறப்பால் கலங்கிய சஜிக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாது துன்பத்தில் துவண்டாள். இதனிடையில் சமஷ் வேலை பார்த்த தொழிற்ச்சாலையில் இருந்து கொடுக்கப்பட்ட பணத்தை தன்பிள்ளைகளின் படிப்பிற்காக வங்கியில் போட்டு வைத்தாள்.
ஆனால்உடனடி வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய போது தான் தன் தோட்டத்தின் நினைவு வந்தது. அன்று முதல் தன் தோட்டத்தில் விளைந்த பல வகையான பழ வகைகளை விற்க தொடங்கினாள்.மற்ற மரங்களில் இருந்து வந்த தொகை குறைவாக இருந்த போதுதன் முதல் கருவாக பாவித்து வளர்த்த மாமரத்தில் இருந்து கிடைத்த தொகை மிக அதிகம். அதனை தன் முதல் மகன் சம்பாத்தியமாகவே பார்த்தாள் சஜி.
காலங்கள் வேகமாக உருண்டோட பிள்ளைகள் தங்கள் படிப்பை முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். ஒரு காலத்தில் அருகில் கூட வீடு இல்லாத நிலை மாறி நிலம் மறைந்து கட்டிடங்கள் கால் ஊன்றி நிற்கும் அளவிற்கு சஜி இருந்த இடம் மாற்றம் அடைந்துள்ளது.
வேலைக்கு சென்ற இருவரும் நன்றாக சம்பாதிக்க ஆரபிக்க, இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்ய வேண்டும் என்று சஜி ஆசைப்பட , அவள் ஆசை நிறைவேற்ற இருவரும் சம்மதித்தனர். அதன்படி இருவருக்கும் திருமணம் முடிந்தது.
தன் வீட்டிற்கு மருமகள் என்பவள் வரும் வரை சந்தோஷமாக இருந்தாள் சஜி.மருமகள் வந்த பின்னும் சில மாதங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், ஒரு சில கருத்து வேறுபாடுகள் மாமியார், மருமகளுக்குள் ஏற்ப்பட இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை வரத் தொடங்கியது. சஜிதா மகனோ தன் மனைவிக்கு சாதகமாக பேச தொடங்கிய காலம், சஜிதாவின் துன்பக்கால ஆரம்பம்.
இவ்வாறு இருவருக்குமான பிரச்சினைகள் தொடர ஒரு நாள் சஜிதாவின் மகன், சஜிதாவிடம் நாங்கள் இருவரும் இரண்டு நாட்கள் சுற்றுலா செல்ல வேண்டி உள்ளது. நீ தங்கச்சி வீட்டில் சென்று இரு அவளிடம் நீ வருகிறாய் என்று சொல்லிவிட்டேன்.நாளையே நீ அவள் வீட்டிற்கு செல்.நான் வந்த பிறகு உன்னை அழைத்து கொள்கிறேன் என்றான்.
தன் மகளை பார்க்கும் ஆர்வத்தில் சரி என்றால் சஜிதா.மறு நாளே தான் மாம்பழம் விற்ற பணத்தை எடுத்து கொண்டு தன மகள் வீட்டிற்கு சென்றாள்.அங்கு மகளை தவிர வேறு எவரும் சஜிதாவை நன்றாக வரவேற்கவில்லை.தன் வீட்டின் சுதந்திரம் அங்கு இல்லாமல் இருக்க சோகம் அவளை வாட்டியது.அப்படியே இரு நாட்கள் கழிந்தன.
மூன்றாம் நாள் காலை தன் மகனை எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தாள்சஜி. சஜியின் மருமகன் தன் மனைவிடம் ஏன் உன் அம்மா அங்கே இருந்தா பிரச்சினை வரும் என எண்ணி உன் அண்ணன் இங்கே கொண்டு வந்து விட்டு போயிட்டானா? நான் வேலை முடித்து வரும் போது உன் அம்மா இங்கே இருந்தா நானே அவரை ஆசிரமத்தில் சேர்த்துவிடுவேன் என எச்சரித்து சென்றான். இதனை கேட்டு கொண்டிருந்த சஜி கவலை கடலை மனதில் சுமந்து கொண்டு தன் மகள் வீட்டை விட்டு வெளியேறினாள்.
தன் வீட்டை நோக்கி நடந்தாள் காலை உணவை உட்கொள்ளாத நிலையில் நடந்தது மிகுந்த களைப்பையும், தாகத்தையும் கொடுத்தது. கால்கள் தன் வீட்டை சென்றடைந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிழல் கூட இல்லா தெருவில் நிழலை தேடினாள். அப்போது தான் தன் தோட்டம் நினைவிற்கு வந்தது. உடனேதன்தோட்டத்திற்கு சென்றால் அங்கு இரண்டு நாள் தான் இல்லாமல் தண்ணீர் ஊற்றாமல் வாடிய செடிகளை கண்டு வருத்தம் அடைத்த அவளுக்கு முதல் மகனாக பாவித்து வளர்த்த மாமரம் மாம்பழங்களின் வாசத்தை அவளிடம் சேர்த்து தான் ஒருவன் உனக்காக இருக்கிறேன் என்று நினைவு படுத்த, அதன் நிழலில் அமர்ந்து அதன் பழங்களை சுவைத்து தன் பசியே ஆற்றிக் கொண்டாள்.
தன் வயற்றில் உருவான சொந்தங்கள்தன்னை கைவிட, தன் உழைப்பால் உருவான மரங்கள் தன்னை கைவிடவில்லை என்று எண்ணி அன்று முதல் தனது வசிப்பிடத்தை மாற்றி கொண்டு இயற்கையோடு சேர்ந்து நிம்மதியான வாழ்வை மேற்கொண்டாள் சஜிதா.
நன்றி..

எழுதியவர் : இடும்பன் வினோத் (8-Jan-17, 11:38 am)
சேர்த்தது : வினோத்
பார்வை : 334

மேலே