காதல் வந்ததேன்

குலதெய்வம் கோயில் செல்கிறோம் இன்று!
புடவை கட்டி வா என்றே சொன்னேன்!
மௌன முகத்துடன் அழகாய் சிரித்தாய்!

கோடை உலாவாக நான்கு நாள் செல்கிறோம்!
சுடிதார் பெட்டியில் அடுக்கி வா என்றேன்!
மௌன முகத்துடன் அழகாய் சிரித்தாய்!

சீண்டிப் பார்க்க வேண்டும் என்று!
நகைச்சுவையாக ஏதோ சொன்னேன்!
மௌன முகத்துடன் செல்லமாய் முறைத்தாய்!

இத்தனை அழகாய் இருக்கிறாயே!
அழகின் ரகசியம் என்னென்று கேட்டேன்!
மௌனச் சிரிப்பை பதிலாய் தந்தாய்!

பிறந்த நாள் வாழ்த்தை பரிசுடன் தந்தேன்!
காதல் விழியுடன் மௌனமாய் சிரித்தாய்!
அழகிய விழிகளில் மொழி பல பேசினாய்!

உன்னிடம் எனக்கு காதல் வந்தது
எதனால் காதல்? எதனால் வந்தது?
பாரம்பரிய புடவையினாலா?
நாகரீக சுடிதாரினாலா?
அழகின் சிரிப்பா? சிரிப்பின் அழகா?
செல்ல முறைப்பா? காதல் விழியா?
மௌன முகமா என்று கேட்டால்
அதற்கும்தானே புதிராய் சிரிக்கிறாய்!

எழுதியவர் : ம கைலாஸ் (8-Jan-17, 11:32 pm)
சேர்த்தது : M Kailas
Tanglish : kaadhal vanthathen
பார்வை : 92

மேலே