காதல் பழக வா-6

காதல் பழக வா-6

காதல் பழக வா-6
உன் விழி ஈர்ப்பே
என்னை உன்னவனாய்
மாற்றியதை புரிந்து
கொள்ளாமல் என்னை
குற்றம் சொல்வது
நியாயம் இல்லை என்
காதலியே
"வணக்கம், வந்து ரொம்ப நேரம் ஆச்சா, தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும்"

"அதெல்லாம் இல்லங்க, இப்போ தான் சாமி தரிசனம் பண்ணிட்டு வர்றோம், வந்த கையோட மகாலட்சமிய பாத்தாச்சு, மனசு நிறைஞ்சிருக்கு"

"சரி வாங்க, நாம அந்த பக்கம் போயிரலாம், எதுக்கு இங்கயே நின்னுட்டு"

"அம்மாடி ராதி இங்க வாம்மா, வந்து பாட்டிம்மா பக்கத்துல இரும்மா, நீ என்ன படிச்சிருக்கடா கண்ணு, என்னல்லாம் சமைக்க தெரியும், நவராத்ரி கொழுவெல்லாம் வைக்கறத பாத்துருக்கயா, நம்ப வீட்ல வருஷா வருஷம் நவராத்திரி அமர்க்களப்படும்,கீர்த்தனைலாம் பாட தெரியுமா, பூஜை நடக்கற சமயம் நம்ப வீட்டு பொண்ணுகளே கீர்த்தனை பாடி கடவுளை வணங்கினா ரொம்ப விஷேஷம்"

அடுத்த அரைமணி நேரமும் வேறு யாரும் பேசவில்லை, ராதிக்கு வருங்காலமாய் ராதியின் அம்மா பார்த்துவைத்திருக்கும் குடும்பத்தின் மூத்தவரான பாட்டியே வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ராதியோ பாவம் ம்ம்ம்….. ம்ம்ம் என்று ம்ம்ம் கொட்டி கொண்டிருந்தாள்.... அந்த வீட்டின் பாரம்பரியம், பழக்க வழக்கம், இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என வரையறுக்கப்பட்ட விதிகள் அனைத்தையும் ராதியின் காது வலிக்க உபதேசம் பண்ணி கொண்டிருந்த பாட்டியை கையாலாகாத தனத்துடன் சகித்து கொண்டிருந்தாள் ராதி....


அவர்கள் சொன்னதிலிருந்து அவர்களின் வீட்டு பெண்கள் சமையல் அறையையும், சாமி அறையையும் மட்டுமே கட்டிக்கொண்டு அழவேண்டும், படுக்கை அறையிலே கணவனுக்கு சேவை செய்வதே இலக்காக நினைத்துக்கொண்டு வாழ வேண்டும், வெளியே போவதென்றால் வீட்டில் உள்ள அத்தனை பேரிடமும் அனுமதி வாங்கி கொண்டு தான் வாசற்படியை தாண்ட வேண்டும், படித்த படிப்பு வீணாக கூடாதே, அதனால் அந்த வீட்டு குட்டி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம், அதை தவிர வெளியே வேலை செய்வதை பற்றி யோசிக்க கூட கூடாதாம்....

ராதிக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது, எத்தனை ஆசையாய் தன் எதிர்கால வாழ்க்கை பற்றி சிந்தித்திருப்பாள்.... லட்சியம், சாதனை என பட்டியல் போட்டுகொண்டு தூக்கத்தில் கூட எந்நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு துடிப்போடு தன் நிமிடங்களை கழித்திருப்பாள், இன்றோ அத்தனையும் அஸ்தமித்து இருள் மட்டுமே வாழ்க்கையாகி போவதை நினைத்தால் எங்காவது ஓடியே போய்விடலாம் என்று திணறி கொண்டிருந்தாள்....
"பாட்டியோ விடுவதாக இல்லை, ராதியோ ஆற்றாமையோடு தன் தந்தையை பார்க்க ராமநாதனோ " பொண்ணும் பையனும் பேசிக்கட்டுமே, அவங்களும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க உதவியா இருக்குமே" என தன்னால் ஆன சிறு உதவியாய் கூற சில நிமிட அலசல்களுக்கு பின் எதோ போனால் போகுதென்று அனுமதி தந்து ராதியையும், தேவனையும் அனுப்பி வைத்தனர்....
ராதிக்கோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருந்தது, அங்கிருந்து போகும் வழி எதுவாய் இருந்தாலும் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு எஸ்கேப் ஆவதே தற்போதைக்கு அவளுக்கு புத்திசாலித்தனமாய் பட்டது, விட்டால் இன்றே ராதியை கூட்டிப்போய் அவர்கள் வீட்டின் சமையல் அறையில் விட்டு விடுவார்கள் போல....
தனியாக வந்துவிட்டாலும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என புரியாமல் ராதி திணறிக்கொண்டிருக்க எதை பற்றியும் அக்கறை இல்லாதவன் போல் போனில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்..ராதிக்கோ கடுப்பாக இருந்தது, ஒரு பெண் எனக்கே இவன் தான் என் கணவனாக போகிறான் என்றவுடன் எத்தனை தவிப்பான உணர்வுகள், பிடிக்கவில்லை என்றாலும் இவன் அருகில் நிற்கும்போது என் பெண்மை சிவந்து போக படபடப்பு தோன்ற என்ன பேச என்று புரியாமல் நிற்கிறேன், இவனோ எந்த உணர்வும் இல்லாதவனாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு, போனை நோண்டிக்கொண்டு...இவனை போய் எப்படி தான் அம்மா செலக்ட் செய்தார்களோ, என்ன ஆனாலும் இவன் நிச்சயம் எனக்கு பொருத்தமாக மாட்டான், இந்த கல்யாணம் நடந்தால் என் வாழ்க்கை டோட்டலி டார்க் தான் ஆக போகிறது...


"உங்க பேர் என்ன?" ஏதாவது பேச வேண்டுமே என ராதி பேச்சை தொடங்க

"தேவன்" ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு மீண்டும் போனை நோண்ட தொடங்கிவிட்டான், என்ன ஜென்மமோ....ராதிக்கு அலுப்பாக இருந்தது....மிகுந்த சிரமத்துக்கு பின் அடுத்ததாய் ராதி பேச ஆரம்பிக்கும் முன்னரே எதோ இம்பார்ட்டண்ட் கால் வந்தது என அவன் அங்கிருந்து நகர நடந்துகொண்டே வந்ததில் பத்து ஜோடிக்கு கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் ராதி....

தேவனோ மும்மரமாய் பேசிக்கொண்டே நிற்க இப்போதைக்கு இவன் வரமாட்டான் போலிருக்கிறதே என சலிப்போடு நின்றி ருந்தவளுக்கு அங்கு நடந்து கொண்டிருந்த கல்யாண சடங்குகள் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த அதை ஆவலோடு பார்க்க ஆரம்பித்தாள்...
பட்டு சேலையும்,பளபளக்கும் தங்க நகைகளுமாய் நின்றிருந்தவளை யார் பார்த்தாலும் கல்யாண பெண் என்றே நினைத்து கொள்வர் , அந்த அளவுக்கு ராதையின் அம்மா கட்டாயத்தால் ஜொலித்துக்கொண்டிருந்த ராதி ஆர்வ கோளாறில் திருமண சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இடத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டாள்...
"இத கொஞ்சம் அந்த தம்பிக்கிட்டே கொடுத்துடும்மா" என்று அர்ச்சகர் பூக்கள் நிறைந்த ஒரு தட்டை நீட்ட தேவனை திரும்பி பார்த்தால் அவன் எங்கு இருக்கிறான் என்ற சுவடே தென்படவில்லை....அடுத்த முறை அர்ச்சகர் தட்டை ராதியின் கையில் திணித்துவிட்டு செல்ல, ராதியோ வேறு வழியின்றி அதை எடுத்துக்கொண்டு மணமக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்....

தட்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகரலாமென்றால் மணமக்களின் உறவினர்கள் ஒருபக்கம், மணமக்களின் சடங்கு ஒருபக்கமென அங்கிருந்து நகர வழியே இல்லாமல் ராதி அங்கேயே நிற்க வேண்டியதாய் போயிற்று....

அந்த தேவனின் முகத்தை பார்த்துக்கொண்டு நிற்பதற்கு இந்த புனித சடங்குகளிலாவது கலந்து கொள்ளலாமென அதற்குமேல் எந்த நிர்பந்தமும் இல்லாமல் ராதியே விரும்பி அங்கு ஆர்வத்தோடு நின்று கொண்டாள்....

"கண்ணா, எனக்கு கால் வலி வந்துடுச்சுப்பா, மூட்டு வலி நிக்க முடியல, நான் அந்த பக்கமா கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வரேன், நீ இங்க இருந்து கல்யாணத்தை பாத்துட்டு வா"

"ரொம்ப முடியலைன்னா ஹாஸ்பிடல் போகலாமா, இல்ல வீட்டுக்கு கிளம்பிடலாம்"

"அதெல்லாம் வேண்டாம்ப்பா, கொஞ்ச நேரம் உட்காந்தா சரியா போய்டும், நீ எங்கயும் போயிடாத, கல்யாணம் முடிஞ்சப்புறம் தான் இங்க இருந்து நகரனும் சரியா"

"ஓகே, ஓகே, கண்டிப்பா எங்கயும் போகல, நீங்க உட்காருங்க, ஏதாவதுனா என்ன கூப்பிடுங்க"


"தம்பி, இந்தாப்பா....இந்த மாங்கல்யம் அம்மன் காலடியில வச்சி பூஜித்து கொண்டு வந்துருக்கேன், இத அம்மாகிட்ட கொடுத்திடுங்கோ, உங்க கல்யாண ப்ராப்தம்க்காக வேண்டிக்கிட்டு அம்மா இதை அம்மன் காலடியில் வச்சி கொண்டு வர சொன்னாங்க, எனக்கு அங்க கொஞ்சம் வேலை இருக்கு, இதை அம்மாகிட்ட நீங்களே கொடுத்துருங்கோ"

தாலியை கையில் வாங்கிக்கொண்டு ஆராய்ச்சியில் நின்றிந்தவனை இடித்து கொண்டு எதிர்புறமாய் நின்றவளை பார்த்ததும் கண்ணனுக்கோ உலகமே மறந்துபோனது.....அதுவரை டீடில் சைன் செய்து சம்மிட் செய்ய வேண்டுமே என்ற கவலை ஒருபுறம் கண்ணன் மனதை தட்டி கொண்டே இருக்க அம்மாவின் வார்த்தைக்காய் பொறுமை காத்தவன் அவளை பார்த்த நிமிடத்தில் அனைத்தையும் காற்றில் விட்டுவிட்டு அவளை மட்டுமே மனதில் கட்டிக்கொண்டான்....

வைத்த கண்ணை எடுக்காமல் ஓர் தனி உலகில் பயணித்து கொண்டிருந்த கண்ணனை” ஐயரின் மாங்கல்ய தானம் பண்ணுங்கோ, மாப்பிள்ளைகள் எல்லாம் பொண்ணுங்க கழுத்துல தாலியை கட்டுங்கோ என்ற அசரீரி போன்ற குரலும் மேல தாளத்தின் "மாங்கல்யம் தந்துனானே" இசையும் ஆட்கொள்ள ஒன்றும் புரியாத அந்த நொடியில் எதோ ஒரு உந்துதலில் தன் எதிர்புறம் நின்றுகொண்டு தன்னை ஒரே நிமிடத்தில் தனதாக்கி கொண்டவள் கழுத்தில் அந்த மாங்கல்யத்தை அழகாய் முடிந்துவிட்டான்....மூன்று முடிச்சுகளும் சிறிது கூட தடங்கல் இல்லாமல் முடிபோடப்பட கண்ணனோ எந்த சலனமும் இல்லாமல் அவளை தன்னவளாகி கொள்ள தன் கழுத்தில் தாலி கட்டப்பட்டதை புரிந்தும் புரியாமலும் அதிர்ச்சியில் திகைப்போடு பார்த்து கொண்டிருந்த ராதிக்கோ கனவில் நிற்பதை போலவே பிரம்மை உருவானது.....


Close (X)

5 (5)
  

மேலே