நதியின் அடுத்த பிறவி

கண்ணுக்கு புலனாகாத
புதிர் ஒன்றாய்
அரூபக் குரலில் உச்சரிப்பாய்
மின்னலுக்கு பளிச்சிட்டு
மறைந்து கொள்ளும் கோட்டோவியமாய்
பறந்த மினுமினுப்பில்
பட்சிகள் பார்க்கும் மிரட்சியாய்
எப்போதாவது நீங்கள்
உணரலாம்....
அதில்
நதிக்கரையில் பேசிக் கொண்டிருக்கும்
அவர்கள்
சற்று நேரத்தில் மீன்களாகி
நீருக்குள் போய் விடுவதை
காணத்தான் வேண்டும் என்பதோடு
நீங்கள் முணுமுணுக்கலாம்...
அதற்கு முன்
நதியை கண்டு பிடித்தவரின்
வயிற்றுக்குள் அவர்கள்
சூல் கொள்ளலாம்...
அதற்கும் முன்
செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
மணலோடு விளையாடி.... மணலோடு
கலவி கொள்ளுங்கள் அவர்களாகி.
நதியற்ற ஊரில் நம்பிக்கை பிறகெப்படித்தான்
பிறக்கும்....?

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Jan-17, 8:23 pm)
பார்வை : 108

மேலே