விழித்தெழு வீரமுழக்கமிடு

விழித்தெழு வீரமுழக்கமிடு

கம்பனின் கைவண்ணம்
வள்ளுவனின் வெண்பா
மகாகவியின் மொழியாம்
நிகரற்ற எம் தமிழே!

சங்கம் வளர்த்த பாண்டியன்
சுங்கம் தவிர்த்த சோழன்
பாரம்பரியம் காத்த பல்லவர்கள்
வாழ்ந்த வீரமண்ணிது!

பால் கொடுத்து மார் காயுமுன்னே
வாள் கொடுத்து பிள்ளைகளை
போருக்கு அனுப்பிய வீரதேசமிது!

ஓங்கி வளர்ந்த மொழியை
ஒதுங்கி வாழ அனுமதிக்காதே

தமிழை நாளெல்லாம் சுவாசித்தாயே!
கைமாறாக என் செய்தாய்?
கலைகளும் கலாச்சாரங்களும்
மறந்தாய்..
கடைச்சங்கம் முற்றும்
காணாமல் போனது..
இடைச்சங்கம் இருந்த
இடம் தெரியவில்லை..

வியர்வை இறைத்து
உயிரை நேரங்களுக்கு ஊட்டி
முற்றாத நெல் அறுவடைத்து
உணவிட்ட விவசாயிகளை மறந்தாய்.

எஞ்சி இருப்பதோ
'ஏறு தழுவுதல்' ஒன்றே!

நினைவில் கொள்
பண்பாடு படுகொலைசெய்யப்பட்டால்
அடையாளம் இழப்பாய்
உன் அடையாளம் இழந்தால்
அதுவும் ஓர் இனப்படுகொலையே !

விழித்தெழு தமிழனே!
வீர முழக்கமிட!

ஒன்றை மறவாதே
'திமில்' பிடிக்கும் தமிழனுக்கு
'திமிர்' உண்டு என்பதனை.....


  • எழுதியவர் : செ.ஞானப்பிரகாசம்.
  • நாள் : 10-Jan-17, 8:42 am
  • சேர்த்தது : gnanapragasam
  • பார்வை : 277
Close (X)

0 (0)
  

மேலே