உழவனே கலங்காதே

காங்கேயம் காளைகூட
உழவுமண்ண சுத்தி வந்த
வியர்வைய தமிழ் மண்ணுல
கொட்டிவந்த..

பிரம்மனைப் போல
புது உயிர படைக்க வந்த
உயிர் தந்து புதுப் பயிர
உயீரா காத்து வந்த..

உணவு படைக்க ஓய்வில்லாமல்
உழைத்து வந்த
உலக மனிதர்களுக்கு பசியை
தீர்த்து வந்த..

அடகு வைத்த நகைகள்
வட்டி கேட்க
மீட்காமல் பொருள்
இழந்த....

வருமானம் வரும் என
நினைத்து வந்த
உன் மனம் வருந்த
வானத்தையே பார்த்திருந்த....

பயீர் வளர தண்ணீர தேடி
நின்ன
தள்ளாடி நடை போட்டு
கீழ் விழுந்த

கொஞ்சம் உயிர் கொண்டு
என் நெஞ்சம் பேச
இறந்து விட்டால் என் குழி
தோண்ட கூலி ஏது...

நான் இந்த செய்தீ சொல்ல
இதை கேட்க நாதி இல்ல
இனி பிழைக்குமா எங்கவாழ்வு
நீதி சொல்ல யாருமில்லை..

என் நெஞ்சு வெடிக்க
நான் இறக்க பஞ்சம் போக்க
அரசன் இல்ல தஞ்சம்
தாரீரோ எம் பயிர்களுக்கு.....

எழுதியவர் : சிவசக்தி (10-Jan-17, 12:14 pm)
பார்வை : 461

மேலே