சொர்கத்திலிருந்து விழுந்த திரிசங்குகள்

சொர்கத்திலிருந்து விழுந்த திரிசங்குகள்

காற்றோடு செல்லும்
வீசியெறிந்த காகிதங்கள்
அகதிகள்

ஆற்றோடு செல்லும்
வாழத்துடித்த மரங்கள்
அகதிகள்

கடல் தாண்டும் காற்றில்
தன்இன மணம் தேடும் பூக்கள்
அகதிகள்

வசிப்பிடம் இழந்து போனதில்
வீதி வந்த நதிகள்
அகதிகள்

சொர்கத்திலிருந்து
கீழே விழுந்த திரிசங்குகள்
அகதிகள்

தாய்மடி இழந்த
பச்சிளம் பிள்ளைகள்
அகதிகள்

தேசமும் பாசமும்
தொலைவாய் போனதின் விளைவாய்
அகதிகள்

துரத்தப்பட்ட
துணைதேடும் பறவைகள்
அகதிகள்

- கி.கவியரசன்


Close (X)

0 (0)
  

மேலே