தமிழா விழித்திடு

தமிழன் வீரம் ஏனோ கணினி எலியின் பின் சென்றதால்தானோ..
விவசாயி எலியின் பின் சென்றானோ..
உப்பிட்டவரை மறக்காத நம் நாடு ஏனோ,
சோறு போட்டவனை மறந்துவிட்டது..
வீரத்துக்கு சிலை வைக்கும் நீ ஏனோ
சோறு போடும் விவசாயிக்கு பட்டினியையும், சாவை மட்டும் மிச்சம் வைத்தாய்...
தமிழை டமில் என்று சொல்லும்போது சும்மா இருந்தோம்..
இப்பொது தமிழ் பிச்சை வாங்கி வளர்த்த ஆங்கிலத்துக்கு அடிமை ஆகிவிட்டது..
காளைகளை தேவியமாக்கி, ஜல்லிகட்டு நம் கலாச்சாரம் என்றோம்..
காளைகளை தின்று ஏப்பமிட்டு, ஜல்லிக்கட்டு கொடுமை என்றான்..
சமுத்திரத்தில் பொய் விழுந்தேன் அது உன் நாடே இல்லை என்று கொல்கிறார்கள்..
கட்டுக்கடங்காத தண்ணியில் ஏனோ பெயரை எழுதி உனக்கு சொந்தமில்லை என்றாய்...
தமிழா இங்கு தமிழுக்கும் இடமில்லை..
தமிழ்நாட்டுக்கும் எங்கும் இடமில்லை..
தமிழனுக்கு மரியாதையே இல்லை..
தமிழ் கலாச்சாரத்துக்கு உயிர் இல்லை..
தமிழன் சொன்னா ஏனோ அதில் அர்த்தம் இல்லை..
ஒரு சிறிய கோபம், யாருமீதும் இல்லை.. என் மீது.. தமிழை ஊனமாக்கிவிட்டோமோ என்று.. அதற்கு நம்மால் எதையும் செய்ய முடியவில்லையே என்று.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
தமிழுக்காக என்னால் முடிந்த ஒரு சிறிய படைப்பு..
- தா மாதவன்

எழுதியவர் : Maathavan (10-Jan-17, 4:24 pm)
சேர்த்தது : maathavantrv
பார்வை : 319

மேலே