விடியல்

விடியல் என்பது
மலர்ந்தும் மலராத காலைப்பொழுது
கலைந்தும் கலையாத மேகங்கள்
விரிந்தும் விரியாத பூக்களின் புன்னகை
சத்தத்திலும் சத்தமில்லா பறவைகளின் குரல்
மழைத்துளியோ என்பதுபோல் பனித்துளி
மாசுமருவற்ற காலைநேரக்காற்று
விழிக்கலாமா வேண்டாமா என்று
போராடும் சூரியன் பகவான்
இதையெல்லாம் பார்க்காத
விடியல் என்ன விடியல்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (10-Jan-17, 7:55 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : vidiyal
பார்வை : 173

மேலே