பயணம்

பயணம்

காலை நேரம் ..
எழுப்ப வேண்டிய
பூனை இல்லை
கடிகாரமும்
தன் ஓட்டத்தை
நிறுத்தி
பல காலம் ஆகிவிட்டது ....

வெளியில்
காக்கை கரையும்
ஓசை ...
புது வருடம்
பிறந்தது என்று
தூக்கத்தில் இருந்து
எழுந்து
ஜன்னலை
திறந்தேன் ,,
என் பூனை
வருமா என்று ,,,,

காக்கைகள் இரண்டு
மதில் மேல்
கலவி நடத்தி
கொண்டிருந்தது ...
காலையிலா....
கேள்வி எனக்குள் ...
அன்பை பறிமாறும்
ஒரு காட்சி
காமம் என்றால்
என் பார்வை தப்பு தான் ...

கண்ணாடி முன்
நின்று முகம்
பார்த்தேன் ..
கறுவா பயல்
என்பது சரியாக
இருந்தது ,,,,,

முகம் அழகாக
கேரட் அரைத்து
பூசினால் போதும்
இணையம் சொன்ன
தகவல் நினைவில் வர
அதை கையாள
தொடங்கினேன் ,,,,

பாதி பூசிய வேளையில்
முகத்தை பார்த்தேன்
சிவப்புக்கு மாறி
கொண்டு இருந்தேன் ...

காலையில் எப்போதும்
ஒலிக்கா கை பேசி
ஒலித்தது ..
அவளா....
அவனா ....

வெறுப்போடு ..
கை பேசி
எடுத்தேன் ,,,
சந்தோசம் ...
என் சீண்டலின்
விஜயம்......

புத்தாண்டு வாழ்த்து
என்றது குரல் ...
ஒரு நடுக்கம்
விளக்கின் அருகில்
தலைக்கு மேல்
பல்லி இருப்பதை
கண்ட பதைபதைப்பு .....

டேய்....
என்ற அழைப்பில்
துயர செய்தியை
சொன்னது அக் குரல் ...
முதல் குரல்
ரண வலியோடு ..

முகத்தில் ஒட்டி
இருந்த கேரட் அரவை
நிர்வாணம் அடைந்தது ....

அவசரம் அவசரமாக
அரசாங்க
மருத்தவ மனையில்
நான்..

நல்ல அடியாம்
ஒருவர் கஷ்டம்
இவன் பரவா இல்லை
என்றான் நண்பன்.....

அவசர பிரிவு
அழுகை ...
ரத்த காட்சிகள்...
கை கால்
தலை என்று
காயத்தில் பலர் ....

சாலையில்
அடிபட்டு இறந்த
நாய் பக்கத்தில்
நின்று பிற
நாய்கள்
கதறும் மாண்பு கூட
இன்றி
செத்து கிடந்த
மனிதனை
மலமாக பார்த்த
மர மனிதர்கள் ,,,

மனதில் துடிப்பு
அவனுக்கு இந்த
நிலை இருக்க கூடாது ,,,
தேடினேன் ,,,,

ஒரு படுக்கை
அவலமாக ...
அரை நிர்வாணத்தில்
ஒருவன்....
தலையில் இருந்து
பாய்ந்த ரத்தம்
கட்டிலில் வடிந்து
ஈ மொய்த்து கொண்டிருந்தது ,,,
யாரோ ..
என்று இருந்தேன் ,,,
அவன் தான் ,,,
ஐயோ ,,,
அவன்தான் ,,,

மூச்சு இருக்கிறதா ,,,
இருந்தது ,,,,
நன்றி
பிடிக்காத கடவுளிடம்
சொன்னேன் ...

நட்பாய்
என் முன்
நின்றவனை
நட்பாய்
காக்க
விரைந்தேன் ,,,,

பலர்
அதே நட்பில்
அதே மன
நிலையில்
ஆங்காங்கு.....

விரைவாக
அவனை
விவரமாக
விவரமான இடத்திற்கு
கொண்டு செல்ல
வைத்தேன் ,,,

அப்போது ..
இன்னொரு
நட்பு
முடிந்து போன
கதை அறிந்தேன் ,,,
அவனை அதே
பிரிவில் தேடினேன்
காத்து விடவேண்டும்
என்று வேகத்தில் ,,,,

மனிதன்தான்
குடிகாரன்
என்றால்
கடவுள் அதை விட
போதை காரன்
என்பதை நிரூபித்தான்...

ஜெயம்
ஜென்மம்
தொலைத்தது
கொடூரமாக
கிடந்தது ,,,
ஒரு நிமிடம்
அழுதேன் ..

இன்னும் அழுதேன்
வெளியே வந்து
என் வண்டியில்
ஏறினேன் ,,,
பயணம்
தொடங்கும் முன்
என் வண்டி சொன்னது
பார்த்து போ
எனக்கு யார் இருக்கிறார்
உன்னை விட்டால் ...

ஒரு மகன்
தன் தாயின்
இதயத்தை
கொடூரமாக
பெயர்த்து
கொண்டு ஓடும் போது
பார்த்து போ மகனே
என்ற தாய் உள்ளம்
என் வண்டியில்
தெரிந்தது......

நான்
விழுந்தாலும்
அது விழுந்தாலும்
இருவரும்
அநாதைகளே
இப்பொது என்
பயணம்
எதையோ
தேடி ......


  • எழுதியவர் : இன்பா
  • நாள் : 10-Jan-17, 9:06 pm
  • சேர்த்தது : nanjil inba
  • பார்வை : 42
  • Tanglish : payanam
Close (X)

0 (0)
  

மேலே