மிஸ்ஸிங் மாமு

மனதில்
மத்தாப்பு
அவன்
மனதில்
மத்தாப்பு .....

நேற்று வரை
இல்லை
இந்த
வலியும்
சுகமும் ..
காதல்
என்றால்
வலியும்
சுகமும்
ஓர் பாதையில் தான் ..

கை பேசி
ஆய்வு கூடமாக
விஞ்ஞானம்
தேடும்
இந்த காதலன்
தாமஸ் ஆல்வா எடிசன்
ரகம்.......

காதலியின்
இமை
அசைவில்
ராப் பாடும்
இவனுக்கு
கால் கொலுசுதான்
கவிதை அரங்கம் ..

முக நூலை நோண்டி
டி .பி யை பார்த்து
செய்தியை தேடும்
இவன்
சன் நியூஸ் காரனின்
சொந்தம்
ஆனால்
எந்த காதலியும்
டி .பியையும்
எப் .பியையும்
காதலனுக்காக வைப்பதில்லை ...

இரவு வந்தால்
இவன் மன்மதன்
உறவு இல்லாதவளும்
இவன் கனவில்
ரதியே ....

பார்தி ராஜாவின்
தேவதைகள்
கனவில் வந்து
வெள்ளை உடை
நடனம் செய்தாலும்
போதை கொள்ளா
இவன் மனம்
காதலியின் பெயரை
சொன்னால்
மப்பு அடித்த
மாமு ....

டாப்பு பிகர்
சூப்பர் பிகர்
கிட்ட நின்றாலும்
குணா கமல் போல
அபிராமி என
காதலியை
தேடும் இவன்
டாப்பு.....

இந்த நாகரிக
காதலில்
இழந்தது
ஓன்று தான் ...
அன்பொழுக
நடந்த அந்த கால
ரொமான்ஸ் ...

மாமா என்று
கொஞ்ச
மடி போதுமோ
என்று அவன் மிஞ்ச
யாரும் பார்த்து விடுவாரோ
என்று அஞ்ச ...
அந்த ரொமான்ஸ்
மிஸ்ஸிங் .....மாமு ..


  • எழுதியவர் : இன்பா
  • நாள் : 10-Jan-17, 9:11 pm
  • சேர்த்தது : nanjil inba
  • பார்வை : 42
Close (X)

0 (0)
  

மேலே