நீ தான் நான் தேடும் காதல் நதி

உன்னை முதல் முதலாய்
நான் பார்த்த நாள் முதல்
நீ தான் என் உள்ளத்தில்
நிறைந்து நிற்கிறாய்
சற்றே அயர்ந்து கண் மூடினாலோ
என் உள்ளமெனும் திரை அரங்கில்
களி நடனம் புரிகின்றாய்
என்னவளாய் காட்சியும் தருகின்றாய்
கண் திறந்து பார்த்தாலோ
நீ தான் அங்கு நிற்கிறாய்
என் ரதியே
இத்தனை அழகு உனக்கு
தந்த அந்த இறைவன்
உன் மனதை ஏனோ
வெறும் கல்லாய் படைத்துள்ளான்
என்னைக் கண்டும்
காணாத மாறி
எங்கோ பார்க்கிறாய்
இன்னமும் பாரா முகம் ஏனம்மா
நீ தான் என்னவள்
நான் நாடி நிற்கும் தேவதை
என்பதை நிலை நிறுத்து
கருங்கல்லாய் இருக்கும்
உன் மனதை
கற்கண்டு மலையாய் மாற்றிவிட்டு
அதில் என் பார்வைப் பட்டு
இனிக்கும் காதல் நதியாய் மாறிவிடு
கண்ணே என்னுள் சங்கமம் ஆகிவிடு
நான் தான் உந்தன் ஆசைக் கடல்
நான் தேடும் நதி அல்லவோ நீ
என் கோதாவரியே


Close (X)

4 (4)
  

மேலே