என்ன செய்தாய்

தூரத்தில் முனகும் பாடலின் வலியாய்........
கரை தீண்டக் காத்திருக்கும் அலையொன்றின் ஏக்கமாய்..............
கனவுகளில் கடந்துபோகும் காணலாய்...........
தனித்துப்போன நிலவொன்றின் தேடலாய்............
தவமிருந்து கண்டுகொண்ட வரமொன்றின் வர்ணனையாய்..........
விரைந்துபோன தென்றலின் ஸ்பரிசமாய்..........
விட்டு விட்டு வந்துபோகும் ஞாபக சாரலாய்..............
உரசிச்செல்லும் மேகங்களின் மென்மையாய்..........
உணர்வுகளில் உருவகிக்கும் முதல் உறவுகளாய்.........
வந்து தெறிக்கும் முதல் மழையின் சிலிர்ப்பாய்..........
எட்டிப்பார்த்த குழந்தையொன்றின் முதல் சிரிப்பாய்............
எழுதிவைத்த வரிகளுக்குள்ளே ஒளிந்துகொண்ட வலியாய் .............
எனக்குள்ளே நீ..........

என்ன செய்தாய் இந்த மனதை
மறுத்தாலும் மறைத்தாலும்
உனையெண்ணி ஏங்க .....?


Close (X)

5 (5)
  

மேலே