மலருக்கு மறுபிறவி

மலருக்கு மறுபிறவி

சிலர் மலர் ரசிப்பார்
சிலர் மலர் பறிப்பார்
சிலர் மலர் பிழிந்து அத்தர் ஆக்குவார்...

மலர் ரசித்தவன்
கவிஞன், கவிதையாக்கினேன் என்றான் !
மலர் பறித்தவள்
மங்கை ,கூந்தலில் சூடி அழகு செய்தேன் என்றாள் !
மலர் பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, மலருக்கு மறுபிறவி தந்தேன் என்றான் .

இதில் யார் உயர்ந்தவர் நீங்கள் சொல்லுங்கள் ?

-----கவின் சாரலன்


  • எழுதியவர் : கவின் சாரலன்
  • நாள் : 11-Jan-17, 9:39 am
  • சேர்த்தது : sankaran ayya
  • பார்வை : 137
  • Tanglish : malarukku marupiravi
Close (X)

0 (0)
  

மேலே