உன்னால் முடியும் தம்பி

உன்னால் முடியும் தம்பி

உன்னால் முடியும் தம்பி !

தம்பி...
துன்பத்தைக் கண்டு
துவண்டு விடாதே !

நம்பிக்கையுடன்
நடந்து செல்
துன்பம் துவண்டு விடும் !

நம்பிக்கை என்னும்
சூரிய சக்தி
உன்னிடம் இருக்கின்றது !

தம்பி !
முடியாது என்று
கூறும் பனித்துளிகளை
திரும்பித் திரும்பி
ஏன் பார்க்கின்றாய் ?

தம்பி
உன்னால் முடியும்
முன்னோக்கிச் செல் !
தோல்வி உன்னை
பின் தொடராது .
வெற்றி முன்னே வந்து
உன்னை வரவேற்கும் !


  • எழுதியவர் : பூ. சுப்ரமணியன்
  • நாள் : 11-Jan-17, 1:07 pm
  • சேர்த்தது : subramanian1956
  • பார்வை : 60
  • Tanglish : unnaal mudiyum thambi
Close (X)

0 (0)
  

மேலே