படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

போதும் ஏவுகணைகள்
தாருங்கள் தண்ணீர்
தவிப்பில் மக்கள் !

உயிரைப் பணயம் வைத்து
உயிர் வளர்க்கும்
தண்ணீர் எடுப்பு !

ஆழ் கிணறு
வற்றவில்லை
உள்ளது ஈரம் !

வட்டக்கிணறு
முகம் பார்க்கும்
வானம் !

ஆணாதிக்கத்திற்குச்
சான்று
ஒரே ஒரு ஆண்

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Jan-17, 7:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 81

மேலே