மரணம்

அனுபவித்து பார்க்க
முடியாத விஷயம் இது

இருந்தும்,

ஒரு சிலர் அனுபவ ரீதியாக
உணர்ந்த விஷயமும்
இதுதான்

இதைக் கண்டு பயப்படுபவர்கள்
பலர்

தைரியமாக எதிர்கொள்பவர்கள்
மிகச் சிலர்

இதன் வரவுக்காக காத்துக்கொண்டு
இருப்பவர்களும் உண்டு

இதற்கு வயது வரம்பு ஒரு
பொருட்டே இல்லை

யாரிடம் எப்பொழுது நெருங்கும்
என்று எவருக்குமே தெரியாது

இது நம்மிடம் அடைக்கலம்
ஆகும் பொழுது   

நமது சகலமும் அடங்கி விடும்

அந்த ஒரு நிமிடம், வினாடி, நொடி,
எப்படி இருக்கும், என்ன தோன்றும்...

சற்று பார்ப்போமே...

இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும்

முக்கியமான விஷயத்தை இன்னவரிடம் சொல்ல வேண்டும்

என் குடும்பத்திற்கும், மக்களுக்கும்
இன்னும் நிறைய செய்திருக்கலாம்

நண்பனை பார்க்க வேண்டும்

ஏதாவது சாதித்திருக்கலாம்

அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்

சண்டை சச்சரவை தவிர்த்திருக்கலாம்

இப்படி.... இன்னும்.... எத்தனை எத்தனையோ

பிறந்து வளர்ந்து பின் போவது நிச்சயம்

போனபின்,

உறவு ..... துடிக்கும் .....

நன்கு தெரிந்த உள்ளங்களின்
மனம் வாடும்.....

பகைமை கொண்டவர் மனம் கூட சற்று வருந்தும்....

நட்பு..... நம்ப முடியாமல்
பரிதவிக்கும்

தெரிந்தவர்களுக்கும்,
நெருங்கியவர்களுக்கும்
இது ஒரு துயர செய்தி...

தெரியாத மூன்றாம் நபருக்கோ
இது ஒரு சாதாரண செய்தி...

ஜனனத்தின் முடிவு மரணம்
என்று அறியாதவர்கள் யாரும் இல்லை

எல்லாம் முடிந்த பின்

சில நாட்கள்....
சில மாதங்கள்...

மேலே குறிப்பிட்ட
யாவரும் ...

இயல்பு நிலைமைக்கு
திரும்புவது யதார்த்தம்

அவரவர்கள் வாழ்கையை வாழ......

இது அவசியம்

என் கவிஞரின் வார்த்தைகளை
கொண்டே முடிக்கிறேன்

மரணமே ....
உனக்கு ஒரு மரணம் வராதா

ஆனந்த் சுப்ரமணியம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (11-Jan-17, 10:00 pm)
Tanglish : maranam
பார்வை : 72

மேலே