வேடிக்கையான காதல்

வேடிக்கையான காதல்

கண்ணீரால் கழுவிட
தான்

நினைக்கின்றேன்

என் மனதில் நீ பதித்த
தடங்களை

கண்ணீர் தடங்கள்
தான்

தடம் பதித்ததேயன்றி

நீ பதித்த தடங்கள்
மட்டும்

பலர் நடந்த பாதையாய்!

கண்ணீர் துளி
கரைத்திடுமோ

காலம் எதை
உரைத்திடுமோ

புரியாது,

சிப்பி பிரசவித்த
முத்துக்களாய்

கண்ணீர் துளிகள்

மீண்டும்,மீண்டும்

உன் நினைவுகளோடே
கைகோர்த்து

தடங்கலின்றி

கண்ணீர் தடங்களில்
நடைபோவது

வாடிக்கையானது

என் காதலும்

வேடிக்கையானது!
#sof_sekar


  • எழுதியவர் : #Sof #sekar
  • நாள் : 12-Jan-17, 12:37 am
  • சேர்த்தது : SekarN
  • பார்வை : 482
  • Tanglish : vedikkaiyaana kaadhal
Close (X)

0 (0)
  

மேலே