ஓலைச்சுவடி - மரபு கவிதை

ஓலைச்சுவடி !!!!


ஓலைச் சுவடியிலே ஒர்ந்திட்ட வாழ்க்கையிது
காலை எழுந்தவுடன் காரியம் செய்வதற்கும்
மாலை மயக்கத்தில் மண்ணில் விளையாட
சோலை மலர்களும் சொல்லுகின்ற காவியமே !


தீதிலா வாழ்க்கைக்குத் திட்டம் வகுத்திட
மேதினி முற்றிலும் மேவிட நாளுமே
காதினில் கேட்டிடும் காலத்தைச் சொல்லிடும்
பாதியில் மக்கள் பரசமாய் நிற்பரே !


சுவடிகள் செப்பிடும் சுத்தமாம் நூல்கள்
கவலைகள் போக்கிடும் காசினி உய்ய
அவனித்தே என்றும் அரவணைக்கும் மக்கள்
புவனமும் ஆளும் புதுமைப் படைக்குமே!


வாழ்க்கை நெறியை வகுத்துத் தருகின்ற
வீழ்ந்திடா ஓலையை விந்தைஎனப் பற்றுவோம்
பாழ்படாமல் காத்துநாம் பாங்குடனே வாழ்ந்திட
தாழ்வுடன் வாழ்வும் தரணியில் செப்பிடுமே !


வாழவகையும் வாழ்க்கைக்கு வாழ்வுமுறை செந்தமிழில்
தோழனாகச் சொல்லுகின்ற தொல்லுலகம் ஓலைகளாம்
ஆழமாகத் தாங்கும் அருஞ்செய்தி யாவினையும்
கீழாக மேலாகக் கிட்டிடுமே நம்மிடையே !


நமைப்பற்றி முன்பே நடுவராகிச் செப்பும்
இமைபோல் நம்முளே இன்றளவும் நிற்கும்
சுமைதாங்கி யன்றோ சுவடிகள் ஏற்போம்
தமைநோக்கா ஓலை தரமான செப்பேடு !


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 12-Jan-17, 2:08 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 18
Close (X)

0 (0)
  

மேலே